771 மிக்க மருத்துவ நிபுணர்களான டாக்டர்கள் கே. ராமச் சந்திரா, பட், ஜான்சன் ஆகியோருக்கு மாலை அணிவிக்கப் பட்டது. (ஆட்டோமாட்டிக்) தானியங்கிக் கடிகாரம் ஒன்றை விழாக்குழு சார்பில் அமைச்சர் மன்னை நாராயண சாமி பெரியாரிடம் தந்தார். ஒரு டேப் ரிக்கார்டர், தங்கத் தாலான கார் சாவி ஆகியவற்றைப் பெரியாரிடம் தந்து, பொன்னாடையும் போர்த்தினார் முதல்வர் கலைஞர். ஏர் கண்டிஷன் செய்யப்பட்டு, வேனிலிருந்தவாறே பேசு வதற்கு ஏற்ற முறையில் இந்த வேனை அமைத்தவர்கள் எல். ஜி. பாலகிருஷ்ணன் கம்பெனியார். விழாவில் வீர மணிக்கு மோதிரமும், ஓவியர் கருணாவுக்கு நல்லாடையும் பெரியாரால் அணிவிக்கப்பட்டன. வெடி முழக்கங்கள் விண்ணை எட்டின. 95 முறை அதிர் வேட்டுகள் கதிகலங்கச் செய்தன எதிரிகளை. பெரியார் வாழ்க! கலைஞர் வாழ்க! கடவுள் இல்லை' என்ற எழுத்துகள் மத்தாப் பூவாய் எரிந்து ஒளி வீசின. தோழர்களே! நான் செத்துப் போனாலும் நீங்கள் நினையுங்கள் என்றைக்குக் கோயில், கடவுள், மதம் இவைகளுக்கு நாம் முழுக்குப் போடு கிறோமோ அன்றே நாம் மனிதர்களாவோம். யாருடைய நெற்றியிலாவது இனிமேல் நாமமோ விபூதியோ இருக்கக் கண்டால், காரித் துப்புங்கள்-அவர்கள் முகத்திலல்லகீழே!’ என்று பேசினார் பெரியார். . . . . . . 25-ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில், இந்தப் புதிய வேனில் உள்ள மேடையில் வீற்றிருந்தவாறே பெரியார் பேசினார். நாமிருக்கும் இந்த தேசம் இந்தியா என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் இந்து என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் இந்து என்பதை ஏற்றுக் கொண்டால், நாலாஞ்சாதியாகிய சூத்திரன் நாம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டால், நாமெல்லாரும் தாசி புத்திரர் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த இழிவிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி தமிழ் நாடு தனி நாடாவதுதான்' என்றார். . r .
பக்கம்:தந்தை பெரியார்.pdf/814
தோற்றம்