772 28-8-73 காலை 11 மணியளவில் புதிய சபாநாயகர் புலவர் கோவிந்தன், பெரியாரை வந்து சந்தித்து, மாலை சூட்டி, மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார். 30-ற். தேதி காலையில் கடலூரில் கி. தண்டபாணியின் (வீரமணி. யின் அண்ணன்) மகள் தேன்மொழிக்கும், ஜெயராமனுக்கும் பெரியார் வாழ்க்கை ஒப்பந்தம் நடத்தி வைத்தார். மாலை யில் "கலைஞர் கருணாநிதி குழந்தைகள் நூலக’த்தைத் திறந்து வைத்தார். 1-9-13 அன்று, திருச்சியை அடுத்த இருரில், பெரியார் "இளைஞர்களே! எதிர் காலம் உங்க ளுடையது. அதனால் நீங்கள் எதையும் முன்னோக்கியே பார்க்கப் பழகுங்கள். தாய் தந்தையரே மூட நம்பிக்கைக் கருத்துகளைச் சொன்னால், பணிவோடு அவற்றை உதா சீனப்படுத்துங்கள்!” என்று புதுமையுரை பு கன்றார். "ஏற்கனவே சலவை செய்து பெட்டி போட்ட துணி களை அலமாரியிலிருந்து எடுத்து, நாளாகி விட்டதே என்று மீண்டும் சலவைக்குப் போடமாட்டோம். அழுக்குத் துணி களைத்தான் சலவைத்குப் போடுவோம்’ என்று இடத் திற்குப் பொருத்தமான உவமை ஒன்றைக் கலைஞர், பேரறிவுத் திறனோடு கூறியிருந்தார். 26-8-13 அன்று நடந்த சலவையாளர் முன்னேற்ற சங்க மாநாடு அது. சமுதாயத்தாலும் கல்வியாலும் பிற்படுத்தப்பட்டுக் கிடக் கின்ற சமுதாயம், அது எவ்வளவுதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், ஏற்கனவே மேல் மட்டத்துக்கு வந்து, கல்வியால் சமூக அமைப்பால் உயர் அந்தஸ்தில் இருக்கிற வகுப்பாருடன் சமநிலை எய்திட முடியாது என்பதைமுதல்வர் கலைஞர் வெகு அற்புதம்ாக எடுத்துக் காட்டி னார். அந்த அடிப்படையில் ஆழமான நம்பிக்கையோடு அவர் காரியமாற்றினார். முற்பட்டோரும் முதல்வர் பதிலும்” என்ற தலையங்கத்தின் வாயிலாக "விடுதலை’ 1-9-73 ஏட்டில், ஆசிரியர் இக்கருத்துகளையும், முதல்வர் தந்த புள்ளி விவரங்களையும் அழகுற எடுத்துக் காட்டினார். இந்த ஆண்டு 16, 17 தேதிகளில் பெரியாரின் 95-வது பிறந்த நாள் விழாக்கள் சென்னையில் நடைபெறும்; மதுரை
பக்கம்:தந்தை பெரியார்.pdf/815
தோற்றம்