உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 விடுகிறது. அதனால் எந்தத் தொந்தரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால்தான் தொந்தரவு. கேள்வி : கிளர்ச்சி, போராட்டம் நடத்த வேண்டும் என் கிறீர்களே அது எப்படி இருக்கும்? பதில் : என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால் நான் அவற்றில் நேரடியாகவே ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று செய்தால்தானே நன்றாக இருக்கும்? ஒதுங்கிக் கொள்வது என்பது எனக்குப் பிடிக்காது! 17-9-1973 பெரியாரின் 95.வது வயதை அழைத்துக் கொண்டு, குணதிசைப் பகலவன் பகுத்தறிவுக் கதிரவனைக் காணவந்து, தனது பொன்னாடை கொண்டு, தங்கநிற மேனியைத் தழுவினான், மகிழ்ந்தான், உவந்தான், பெருமூச் செறிந்தான்! பின், அவன் அகற்றப்பட்டான்! ஏன்? பூக்கடை களுக்கு இன்று போக்கிடமே பெரியார் திடல்தானே! ஆறு மணிக்கு, அன்றலர்ந்த மலர், வெண்தாடி வேந்தனது சந்தனத்து மேனியிலே தவழ்ந்து விளையாடியது. 6 மணி எப்போது அடிக்குமெனக் காத்திருந்த மக்கள்-அலை, மகிழ்ச்சிப் பேரொலியுடன், வரிசை வரிசையாய்ச், சாரை சாரையாய்ப் படையெடுத்தது. அமைச்சர் பெருமக்கள், மரியாதைக்குரிய நீதிபதிகள், மாண்புக்குரிய சட்டமன்றப் பேரவை-மேலவை உறுப்பினர்கள், தலைவர்கள், அதி காரிகள், அலுவலக ஊழியர்கள், தி.க. கருஞ்சட்டையினர், தி.மு.க. கருப்பு சிவப்புக் கரையினர்-வந்து, கண்டு, சென்ற வண்ணமிருந்தனர். பெரியார் திடலில், பகுத்தறிவுப் பாதை மாறாத உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் கவியரங்கம். வீரமணி வரவேற்றார். "விடுதலை"யின் ஆஸ்தான கவி கலிபூங்குன்றன், சுகிசிவம், குடிஅரசு, கவியரசு பொன்னி வளவன், கா. வேழவேந்தன் ஆகிய கவிஞர்களின் பாடல் முழக்கம். இறுதியில் பெரியார் சிற்றுரை!-'தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம், அது