உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 அண்ணா 26-5-1946 'திராவிடநாடு” இதழில் "மரண சாசனம்’ என்ற தலைப்பிட்டு எழுதிய அரிய கட்டுரையைப் படிக்குந்தொறும், கண்ணிர் ஊற்று வெடிக்கும்; கனிவான உள்ளமும் துடிக்கும்! 3. இப்போதைய மாநாட்டை வீரமணி திறந்து வைத்தார்; தலைமை ஏற்ற பெரியார் முழங்கினார் - 'கழகத் தோழர்களே, நீங்கள் உயிருக்கு அஞ்சாதவர்கள் தியாகத் தின் சின்னமாகிய கருஞ்சட்டை அணிந்திருப்பவர்கள். சுதந்தாத் தமிழ்நாடு கேட்பது சமுதாய விடுதலை பெறு வதற்காகத்தான், கேட்பது சட்டவிரோதந்தான்; ஆனால், நியாய விரோதமல்ல. ஏழாண்டு சிறையிலிட்டால் பரவாயில்லை என நீங்கள் ஏற்கவேண்டும்' என்று. மாலையில் மாபெரும் ஊர்வலம். கருஞ்சட்டைத் தோழர்களின் கங்கு கரை காணாத எழுச்சிப் பேரணி, மக்கள் திரளால் மதுரை மாநகரே சிறுத்தது! மதுரை அவுட் போஸ்டில் அமைக்கப் பட்டிருந்க பெரியார் சிலை, இரவு 8.30 மணிக்குத் திறந்து வைக்கப்பட்டது. சிலையினைத் திறந்து வைக்க வேண்டிய முதல்வர் டாக்டர் கலைஞர், உடல் நலக் குறைவால் வர இயலவில்லை எனத் தந்தி அனுப்பியிருந்தார். டாக்டர் நாவலர் தலைமையில் அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், மனலி கந்தசாமி, மேயர் முத்து, வீரமணி, பெரியார் ஆகியோர் பேசினார்கள், "பெரியாரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியலே இயங்கிட முடியாது. பழைமை வெறி பிடித்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட ஈ. வெ. ராமசாமிப் பெரியார் துணிந்து நாத்திகப் பிரச்சாரம் செய்தவர்' எ ன்று 5-10-13 :இந்துஸ்தான்டைம்ஸ்’ ஏடு தந்தைபெரியாரைப் பாராட்டி எழுதிற்று. தி.க., தி.மு.க. இரண்டுக்குமே எதிரிகள் ஒருவரே அதனால் நாமே ஒருவர்க்கொருவர் அழித்திட 'நினைக்கக் கூடாது. பொது எதிரியை ஒழிக்க, அண்ணா சொன்னதுபோல், இரட்டைக் குழல் துப்பாக்கியாய்ச் செயல்பட வேண்டும்" என்று திருவாரூரில் 10-10.73 அன்று முதலமைச்சர் கலைஞர் மொழிந்தார்.