உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

783 தஞ்சை, தர்மபுரி போன்ற ஊர்களில் பெரியார் இசிலைக்கு அடியிலுள்ள பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக்கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவை நீதிபதி எம்.எம். இஸ்மாயில் 11-10-73 அன்று தள்ளுபடி செய்தார். சிலைக்கு உரியவரின் கருத்துகளை அடியில் பொறிப்பதில் தவறில்லை என்றார் ஜஸ்டிஸ். - 14-ந் தேதி சேலத்தில் உரையாற்றிய பெரியார் மதச் சார்பற்ற நாட்டில் நேற்று ராவணனைக் கொளுத்தி, ராம் லீலா கொண்டாடலாமா? அப்போது நான் ஏன் இராமனைச் செருப்பால் அடிக்கக் கூடாது? ஆகவே, இந்தக் கிளர்ச்சியில் சிறைசெல்ல, மற்றும் உயிர்த்தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள் முன்வந்து பெயர் கொடுங்கள். வர இயலாத மற்றவர்கள் பொருளுதவியாவது செய்யுங்கள்' என்று வேண்டினார். மேலும் அன்றைய விடுதலை'யிலும் "தமிழர்கள் சூத்திரர், பார்ப்பனரின் தாசி மக்கள் என்கிற இழிவு நீக்க மகாநாடு” என்னும் தலையங்கமும் வரைந் திருந்தார். சென்னை அல்லது திருச்சியில் டிசம்பரில் கூட்டுவதாக இருக்கிறேன். தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு இதில் அதிகாரமில்லாததால், ந்ம்முடைய இந்தப் போராட்டம் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகத்தான். போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள்-ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட-இதற்குப் பொருளுதவி வழங்கலாம்; என்று விளக்கியிருந்தார் பெரியார். அக்டோபர் 16-ந் தேதி வெளியான செய்தி ஒன்று; உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பவுத்த குரு பிரடரிக் வி.லஸ்டிக் என்பர் 1954-ல் பர்மாவில் பெரியாரைச் சந்தித் தவர். உருவத்திலும் சிந்தனையிலும் அவர் சாக்ரட்டிசை ஒத்தவர். அன்னார் இந்த ஆண்டு பெரியார் பிறந்த ந்ாள் விழா நிகழ்ச்சிகளில், பர்மா நாட்டில் பங்கேற்றார். 30 ந் தேதி மலேசியாவில் பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழாக்களில், முருகு. சுப்பிரமணியம் பெருமிதத்துடன் கலந்து கொண்டார். - -