784 18-ந் தேதி பிரதமர் இந்திரா காந்தி, புவனேஸ்வரில் நிருபர்கள் கேட்டபோது, "தி.மு. க. தனிநாடு கேட்க வில்லை. ஆனால் தனிநாடு கேட்கின்ற ஈ. வெ. ராமசாமியை ஆதரிக்கிறது. கருணாநிதி கேட்பது மாநில சுய ஆட்சியை விட அதிகம்” என்று பதில் கூறியிருந்தார். விடுதலை'யில், மாவட்டத் தலைவர்களுக்கு, என்று. ஒரு பெட்டிச் செய்தி 17-ந் தேதி வெளியிடப்பட்டது:'வடஆர்க்காடு, தர்மபுரி, திருச்சி, மதுரை, கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் கழக ஆக்க வேலைகளில் ஒரு முயற்சியும் நடைபெறவில்லை. என்னுடைய கூட்டங்களே ஏற்பாடு செய்யக் காணோம்! வர இருக்கின்ற இழிவு நீக்க மாநாடுகளுக்காவது, ஒத்துழைப்புத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்! ஈ. வெ. ராமசாமி.' அக்டோபர் 23-ல் முதல்வர் கலைஞர் ஆரணியில் பேக கையில், சுயமரியாதைக் கொள்கைகள்தான் தி. மு. க. ஆட்சியின் கொள்கையாகும். தனக்குக் கண்பார்வை யில்லாததால் புறக்கணிக்கப் படுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதே கண்ணொளித்திட்டம்; சமுதாயத்தால் ஒதுக்கப்படுவோமோ என்ற அச்சத்தைப் போக்கி வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டுவதே பிச்சைக்காரர் மறுவாழ்வுத்திட்டம்; மனிதனை மனிதன் இழுக்கின்ற மானங்கெட்ட செயலைப் போக்குவதே கைரிக்ஷா ஒழித்து சைக்கிள்ரிக்ஷா வழங்கும் திட்டம், இவை யாவுமே சுயமரி யாதை அடிப்படையில்தான் செய்யப்படுகின்றன. அண்ணா வைத் தானைத் தளபதியாய்க் கொண்ட பெரியாரிசமே எங்களுக்கு வழிகாட்டுகிறது!" என்றார் இறும்பூதுகொண்டு. அடுத்த 30.ந் தேதி சென்னையில், தி.க.வுக்கும், தி. மு. க. வுக்கும் உள்ள உறவு தனித்தன்மை வாய்ந்ததாகும். திராவிடர் கழகத்தைத் தடைசெய்யத் தேவையில்லை என இந்திரா அம்மையாரே சொன்ன பிறகு, நான், என்ன சொல்ல இருக்கிறது?’ என்று நிருபர்களுக்கு விடையளித் தார் கலைஞர்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/829
தோற்றம்