785 25.10.73 பகுத்தறிவாளர் கழகத்தில் பேசிய கம்யூனிஸ்டு (வலது) தோழர் தா. பாண்டியன் எம். ஏ., பி. எல்., தமிழ் நாட்டுக்குப் பகுத்தறிவு அடிப்படையில் ஆழமான சமூக சீர்திருத்தப்பணி தேவைப்படுகிறது. இதற்கு நாங்கள் எப்போதும். ஆதரவு தருவோம்” என்றவர்; இன்றளவும் வார்த்தையைக் காப்பாற்றி வருகின்றார்! பெரியார் பேனாவை எடுத்து விட்டார். 23, 24, 25, 26 தேதிகளில் தொடர்ந்து விடுதலை'யில் சிறப்பான தலை யங்கக் கட்டுரைகள் வெளியாயின. முதல்நாள் நம் கடமை’. "சென்னையில் டிசம்பர் 8, 9 தேதிகளில் இழிவு ஒழிப்பு மாநாடுகள் நடைபெறும். மிகச் சமீபகாலம் வரையில் தமிழ் நாட்டில் நமது தஞ்சை, திருநெல்வேலி மாவட்டங்களில், பார்ப்பனர்கள் தங்கள் தெருக்களில் பஞ்சமர்களை நடக்க விடுவதில்லை. கக்கூஸ் எடுப்பதற்குக்கூட அய்ந்தாம் சாதியாரை அனுமதிக்காமல், நாலாம் சாதி சூத்திரரையே கக்கூஸ் சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தி வந்தார்கள். எனக்குத் தெரியும். 1940. ஆம் ஆண்டு வரையில் ரயில் நிலையங்கள், சத்திரங்கள், பொதுவிடுதிகள், கோயில்களில் பார்ப்பனருக்குத் தனியிடம் என்பது இருந்தது. வெளிப் படையாகத் தெரியாமல் அதே நிலைமைகள் இப்போது மறைத் துவைக்கப் பட்டிருக்கிறதே ஒழிய, உண்மையில் அதற்கான ஆதாரங்களில் மேலும் பலப்பட்டு வருகின்றன. அதாவது அரசியல் சட்டத்திலும் சாதிப்பிரிவு இடங் கொண்டு விட்டது. இந்த ஜாதி இழிவுப் பிரச்சினைகளில் நம்மைப்போல் பெரிய ஜாதிக்காரர்களோ, பதவிக்காரர் களோ, பிரபுக்களோ கவலைப் படுவதில்லை. நாம்தான் இழிவை நீக்கி மானம் பெறுவதற்கு ஆகப் போராட வேண்டும்.' - இரண்டாம் நாள் சிந்தித்து ஆவன செய்ய வாருங்கள்' என்பதும், முதல்நாள் போலவே அன்பழைப்பு. மூன்றாம் நாள், வருவது வரட்டும். பிரிவினை கேட்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றியதே. பெ.-50 -
பக்கம்:தந்தை பெரியார்.pdf/830
தோற்றம்