உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/833

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790 நம்மை விட்டால், முன்னேற்றக் கழகம் ஒன்று மூணே முக்கால் பேர்; அவர்களும் நம்மிடம் வந்துவிடுவார்கள். கம்யூனிஸ்ட் எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறது தான் அவன் வேலை. உலகத்திலேயே கொள்கை இல்லாத ஒரு கூட்டம் என்றால் நம் கம்யூனிஸ்டுதான். காங்கிாசுஎன்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன். அவனோடு போட்டி போடுகிற இன்னொரு காங்கிரசு. இப்போது துவக்கின. ஒரு க.சி இருக்கிறது. அண்ணா முன்னேற்றக் கழகம் என்று, அவர்களுக்கு என்ன வேலை? எதிரிகிட்டே பேசிக்கொண்டு. இவர்களை ஒழித்துவிட்டு வருகிறேன்; எனக்கு ஏதாவது எச்சல்கலை போடுகிறாயா? என்று கேட்கிறார்கள். அப்புறம் பார்ப்பான் கட்சி சுதந் தராக் கட்சி; ஜனசங்கக் கட்சி; வெங்காயக் கட்சி! தமிழரசுக் கட்சி எவன் ஜெயிக்கிறானோ அவனோடு சேர்ந்து கொள் கிறது; முன்னேற்றக் கழகம்! ஜெயித்தால் இவர்களோடே! வேறு ஒன்று வந்தால் அவர்களோடே? அருமைத் தோழர்களே! இது நமக்குக் கடைசி முயற்சி என்று நினைக்கணும். இப்படியே சாகிறதைவிட சனத் தனம் வேறே இல்லை. ஆனதினாலே ஏதோ ஒர் கிளர்ச்சி செய்கிறேன் இப்போது நான். சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று அடுத்த மாதம் கூட்டுகிறேன். ஒன்றும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது அல்ல, பெரிய இலாபம் அடைகிறதற்கு அல்ல, நமக்கு இருக்கிற இழிவு போகலும், அவமானம் போகணும் இப்போது நாம்தான் ஆள்கிறோம்; என்ன செய்ய முடிந்தது? நம் இயக்கத்தினுடைய இலட்சியம் இந்த (டெல்லி) ஆட்சியை ஒழிப்பது இதிலிருந்து விலகனும் என்று எவனாவது நினைத்தால், ஏழு வருஷம் தண்டிப்பேன் என்று. சட்டம் போட்டானே, எனக்கும் அண்ணாதுாைக்கும் பயந்துதானே, அந்த மாதிரி போட்டான்! என்னுடைய ஆசையெல்லாம், ஜெயிலிலே செத்தால் மோட்சம் அடைவேன்-இன்பம் அடைவேன். பின்னே எனக்க மன்ாம் இல்லை, அருமைத் தோழர்களே! நமக்கு.