791. இது ஒரு பரீட்சைக் காலம். சும்மாவே இருந்தால் என்ன ஆகிறது? இந்துமதம் இல்லை என்று அவன் அரசியல் சட்டத்தைத் திருத்தட்டுமே சட்டத்திலே எல்லாவற்றையும் கட்டிப் போட்டுவிட்டு, அது சொன்னால் தப்பு; இது செய் தால் தப்பு; ஏழு வருஷம் என்றால் எப்படி இது ஒரு நாடாகும்? - - பெரிய கிளர்ச்சி நடந்தால்தான் விஷயங்களைச் சரி பண்ணிக்கொள்ள முடியும். இந்தக் கிளர்ச்சியை ஆரம் பிக்கிற இடந்தான் தமிழ்நாடே ஒழிய, ஒரு வருஷத்துக் குள்ளே இந்தியாவிலே பல இடங்களிலே. இந்த நெருப்புப் பிடித்துக்கொள்ளும்! ஆகவே, இங்கே ஒரு அய்யாயிரம் பேர் ஜெயிலுக்குப் போனோம் ஆனால், மற்ற இடங்களிலும் பற்றிக்கொள்ளும். நம் இளைஞர்கள் எல்லாம் துணியனும். எல்லாம் பெண்களாகவே ஜெயிலுக்குப் போகணும். இது சமுதாய சம்பந்தமானது. உங்கள் குடும்பமோ, பிழைப்போ, கலந்துகொள்ள இடங்கொடுக்கவில்லை என்றால், நம் மாலான உதவி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். மாநாடு நடத்த, உடனே நாம் ஒரு லட்ச ரூபாய் சேர்த் தாகனும்! - - இன்று எனக்குப் புத்தி சுவாதீனம் இல்லை என்று கூடச் சொல்லுவேன்; என்ன பேசவேணும் என்று இருந்தேனோ ஒன்றும் ஞாபகத்திற்கு வரவில்லை. முந்தாநாள் பூரா ஒன்றுமில்லை; நேற்று ஒரு கப் கஞ்சி, தண்ணிர்கூட இல்லை. இன்று இன்னொரு இட்டிலி கொடு என்றேன். அம்மா முடியாது எ ன் று சொல்லிவிட்டார்கள். நாசமாய்ப் போகட்டும் என்று சொல்லி விட்டு வந்தேன். . இப்போது நீங்கள் எல்லாம் பொறுப்போடு வெளியே போகணும். நீங்கள் வந்து அந்த மாநாட்டிலே கொடுக்கிற உற்சாகம்தான் மக்களுக்கு நல்லது ஆகும். சும்மா மாநாடு நடத்தி விட்டுப் போகிறதில்லை; நடந்த உடனே கிளர்ச்சி ஆரம்பிப்போம்! நாம் அவர்களுக்கு நோட்டீஸ் விடணும்என்ன, இதை மாற்றுகிறதற்கு வழி பண்ணுகிறாயா? இல்லை, உன்னை ஒழிக்கிறதா? என்று. மாநாட்டுத்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/834
தோற்றம்