79t நான் பிரிவினைவாதி எனத் திட்டமிட்ட பிரச்சாம் செய் யப்படுகிறது. இதற்குப் பக்திரிகைகளும் பெருமெடுப்பில் ஒத்து ஊதுகின்றன. நாலே நாளில் கழகத்தைக் கவிழ்க் து விடுவோம் என்றே முயற்சிகள் நடைபெறுகின்றன!" என்றார். 20-11-73 அன்று சென்னை மாநகராட்சி மன்றம் கலைக்கப்பட்டதாகச் சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்டது! 'மத்திய அரசே! இழிவை நீக்கிச் சட்டம் இயற்று: இல்லையானால் எங்களுக்குள்ள ஒரே வழி நாட்டுப் பிரிவினைதான் வட நாட்டானே! நீ உடனே உன்னுடைய மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொள். இனிமேல் உனக்கு இங்கே வேலையில்லை!" என்று 19-ந்தேதி பெரியார் திருச்சி யில் முழக்கமிட்டு, மறுநாள் மதுரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, ஜாதி வெறியர் சிலர், பெரியாரைப் பேசவிடாமல் கூச்சலிட்டு, இடையூறு செய்யப் பார்த்தனர். காலிகள் முயற்சி பலிக்கவில்லை, அதன் பின் 45 நிமிட நேரம் பெரியார் பேசியே முடித்தார். 20-ந்தேதி காரைக் குடியில் ரூ 1, 150-ம், 21 திருநெல்வேலியில் ரூ. 1,300 கார் நிதி வழங்கப்பட்டது. இங்கெல்லாம் லட்சக் கணக்கான மக்கள் திரண்டு, பெரியாரின் போர்ப் பிரகடனத்தைக் கேட்டு உணர்ந்தனர். 22-ந்தேதி தஞ்சையில் இனி நான் என் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் கழிப்பேன். விடுதலை பெற்றால், மீண்டும் கிளர்ச்சி செய்து, சிறை புகுவேன்; ஏனென்றால், நான் மறைந்தால், மீண்டும் ஆரியம் தலை தூக்கும் அப்புறம் தமிழர்களின் இழிவை ஒழிக்கப் போவது யார்?' என்று வினாத்தொடுத்தார் பெரியார்! சென்னைப் பொதுக் கூட்டத்திற்காக வந்த Gruiflurríř 23-11-73 அன்று "பிரிவினையா” என்ற தலையங்கமும் எழுதினார்:- டில்லி அரசாங்கத்தில் இருப்பவர்களுக்குக் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வெறும் மிரட்டலில் பருப்பு. வேகாது. நாங்கள் தி. மு. க. வை ஆதரிப்பது உண்மைதான். ஆனால் அவர்கள் எங்களை ஆதரிப்பது இல்லை; அவர்களின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. தி.மு.க.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/837
தோற்றம்