795 ஆட்சியில் பார்ப்பானை உள்ளே விடாமல் இவர்கள் வைத் திருப்பதே, எங்களுக்குப் பெரிய உதவியாக நினைக்கிறோம். இத்தோடு அவர்களுக்குப் பதவி போனாலும், நம் கழகத் திற்கு வலிவுதானே என்கிற எண்ணக்காரன் நான். ஆகவே, பொது மக்களே தோழர்களே! எந்த விளைவுக்கும் தயார், தயார், தயாராகுங்கள்!' * : : மனிதனை மனிதன் இழுப்பது சட்டப்படிக் குற்றம் என்னும் கைரிக்ஷா ஒழிப்பு மசோதா, 28-11-73 அன்று தமிழக சட்ட மன்றத்தில் தாக்கலாயிற்று. 29.ந்தேதி நாடாளுமன்றத்தில் பெரியார் ஓர் விவாதப் பொருளாளார், உள்துறை அமைச்சராக உமாசங்கர் தீட்சித் என்பவர் அப்போது பதவி வகித்தார். அவர் கூறினார்! பெரியாரின் பிரிவினைப் பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. தாம் விரைவில் இறந்துவிடுவோம் என்கிற எண்ணத்தில் அவர் இந்தப் பிரிவினைக் கொள்கையைத் தீவிரப்படுத்துகிறார். மிகவும் வயதாகிவிட்ட அவரது மனத்தை மாற்றக்கூடுமென எண்ணவில்லை' என்று. அவருக்குத் துணை அமைச்சரான மொய்சீன் என்பவர், தமிழக அரசுக்கு எழுதிப் பெரியார்மீது சட்டப்படி நட வடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகக் கூறினார். தீட்சித் அளித்த பதில் குறித்து: முதல்வர் கலைஞர் சென்னையில் 30-ந்தேதி-"அவர் இயல்: புக்கு ஏற்ப அவர் ஜாதகம் கணிக்கிறார்!" என்று கண்டித்து உரைத்தார். . . . . & பெரியார் விட்டுவிடுவாரா? 30-11-73 பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போகுமா?’ என்று. கேட்டார் விடுதலை’ மூலமாக. 'நாடாளுமன்றத்தில், அமைச்சர்கள் கூறியுள்ள பதில், இருக்கின்ற பிரச்சினையைத் தீர்க்க உதவுமா? மற்ற மாநிலங்களுக்கும் இது பரவாதா? இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியை இருட்டடிப்புச் செய்ய நினைத் தார்களானால், பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக் கிற கதைதான்!” என்று எழுதினார் பெரியார். தாழ்த்தப் பட்டோரையும் கோயில் அர்ச்சகராக்குமாறு அரசி.க 夺
பக்கம்:தந்தை பெரியார்.pdf/838
தோற்றம்