797 சாகத்தான் போகிறான்; அது ஒரு நல்ல காரியத்திற்காக நடக்கட்டுமே ஆகவே, நாம் ஒரு துணிவான முடிவுக்கு வந்து. விட்டோம். தி.மு.க. ஆட்சி ஊழலாமே? அப்படியானால் ஊழல் இல்லாமலா இந்த அம்மையார் ஆட்சியைப் பிடித் தார்கள்? அம்மையாரிடத்தில் தெரிகிறதே அசல் பார்ப்பன வெறிக்கோலம்! முன்னாள் குடிஅரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன், இந்நாள் குடிஅரசுத் தலைவர் வி. வி. கிரி இருவருமே பார்ப்பனர். தமிழ் நாடு தவிர மற்ற மாகாண முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பார்ப்பனர்கள். தான்! இதைச் சொல்ல எங்களுக்கு அச்சம் கிடையாது. காரணம், நாங்கள் ஒட்டுப் பிச்சை கேட்போரல்ல? இவர்கள். சொல்லுகிறார்கள்-நான் சாதாரண ஆளாம் தடை செய்து பார்! அப்போது தெரியும் இந்தியா பூராவும் பற்றி எரியுமே எங்கள்பிரச்சினை ஆகையால் தூங்குவதுபோல் நடிக்காமல், விண் குற்றம் சாட்டாமல், பிரச்சினைக்குச் சரியான பதிலை. உடனே சொல்லுங்கள்!' என்று முரசடித்தார் பெரியார்! 4.12-73 தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஒத்திவைப்புப். பிரேரணைகளுக்கு முதல்வர் கலைஞர், வெகு விளக்கமான, திட்டவட்டமான பதிலைத் தெரிவித்தார்: "தடைசெய்யக் கூடியஅளவுக்குத் திராவிடர் கழகம்அவ்வளவு பெரியகட்சியா என்ன? என்றுதென் மாநிலங்களில் சுற்றுப்பிரயாணம் செய்த பிரதமர் சொல்லியிருக்கிறார். பெரியாரின் பிரிவினைக் கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறி விட்டார். அப்படியிருக்கமாநில அரசு மாத்திரம் ஏன் இதற்கு, முக்கியத்துவம் தரவேண்டும்? மேலும், நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளும் சில இருக்கின்றன. நீங்கள் அதையும் தெரிந்து கொள்ளவேண்டும். மதுரையில், பிரிவினை கோரும் மாநாடு ஒன்றைப் பெரியார் திறக்க இருந்தார்; அதைத் தடை செய்தோம். பெரியாருடன், அமைச்சர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அங்கு பிரிவினை பற்றிப் பேசப்பட்டால், இது எங்கள்கொள்கை அல்ல என்று நாங்கள் அங்கேயே மறுத்திருக்கிறோம். பெரியார்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/839
தோற்றம்