800 இப்போது நல்லசொற்பொழிவுகளைக் கேட்டு, ரொம்ப உணர்ச்சியோடு, பக்குவமான நிலையில் இருக்கிறீர்கள். நான் பேசுவதன் மூலம் எங்கே இது கலைந்து போய்விடுமோ என்று பயப்படுகிறேன். அவ்வளவு நல்ல தெளிவாக, யாருக்கும் விளங்கும்படியும், ஒவ்வொ ருவர்:ானமும் உடனே காரியத்தில் இறங்கும்படியான உணர்ச்சி «rύι, διοι μιμμιώ, நல்லவண்ணம் அவர்கள் பேசினார்கள். எனக்கம் தெரியாத, இதுவரையிலும் நான் கெரிந்திருக்காக, அநேக அருமை யான விஷயங்களை எல்லாம் பேசினார்கள். நாம் செய்வது மு: கருதும்படி நல்லவண்ணம் விளக்கினார்கள். இனி நான் சம்பிரதாயத்துக்குத்தான் இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டியிருக்கிறது. கோழர்களே! நான் இந்த மாநாடு. கூட்டி இருப்பதன் நோக்கம் போராட்டக்கை உத் தேசித் து அல்ல; அல்லது இந்த ஆட்சியிலிருந்து விலகவேண்டும் என்கி ற எண்ணத்தை உத்தேசித்து அல்ல, மனிதசமுதாயமாகிய இாம், சமுதாயத் திலே ஈனப்பிறவிகளாக அசிங்கமான கருத்தில் இன்னொரு காதியானுக்கு, அதிலும் நம் நாட்டிலே பிழைக்க வந்த ஒரு சிறு கூட்டத்தானுக்கு அடிமை களாக, தாசிமக்களாக இருந்து வருவதே ஆட்சியின் தன்மை, என்கிற இழிவான நிலைமையிலே இருந்து மாறவேண்டும் என்று கேட்கிறோம். இது இயற்கை1 இப்போது, நண்பர் நமது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இந்தக் கோயில் அர்ச்சகர் வேலை யாரும் பண்ணை லாம் என்று இர்மானம் பண்ணியுங்கூட, இந்த அரசாங்கம் செய்த சட்டம் செல்லாது என்று பண்ணி, நமது இழி நிலையைச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தி விட்டத னாலே, நமக்கு ஆத்திரம் கொஞ்சம் அதிகமாகிப் போயிற்று. அதனாலே உணர்ச்சி வந்தது. மாநாடு போட்டோம் இது ஒரு திருப்திகரமான மாந்ாடு. நம்து ஆசைப்படி எல்லாமே கல்ல வண்ணம் நடந்து இருக்கிறது. 'து நல்ல தீர்மானங்களைப் போட்டுவிட்டோம்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/842
தோற்றம்