801 அழகுக்காகத் தீர்மானம் போடவில்லை; கண்டிப்பாக இழிவு தீரவேணும், இது போகாவிட்டால் நம் கதி என்ன ஆகும் என்கிற நிலைமையிலே இந்தத் தீர்மானங்களைச் செய்து இருக்கிறோம். எனக்கு ஒரு பொறுப்புக் கொடுத்திருக் கிறார்கள்; எப்போது செய்கிறது என்கிறதைப் பற்றி தலைவர் சொல்லுவார் என்று! - முதலாவதாக நான் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். மாநாடு முடிந்தவுடனே தீர்மானங்களை மந்திரிகள், குடி அரசுத் தலைவர், இந்தியப் பிரதம மந்திரி இந்திரா அம்மாள் அவர்களுக்கும், மற்றும் பார்லிமெண்ட் மெம்பர்களுக்கோ, நம் அரசாங்கத்துக்கோ, இன்னும் யார் யாருக்கோ அனுப்பி, அவர்கள் நம் சேதிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஆதரவான பதிலை அனுப்பி வைக்க வேணும் என்று கேட்கப் போகிறோம். அது வந்த பிறகு, நம் மக்களுக்கு அனுகூலமாக இல்லாவிட்டால், கிளர்ச்சியில் இறங்குவது என்று திட்டம்போட்டு இருக்கிறோம். பெரிய காரியந்தான்! தோழர்களே! நான் நினைக்கிறேன்; இவ்வளவு பெரிய காரியத்திற்கு நிபந்தனை போட, கொஞ்சம் வாய்தா கொடுத்துதான் ஆகவேண்டும்! வருகிற ஜனவரி மாதம் குடியரசு நாளாகிய 26-ந் தேதி வரைக்கும் வாய்தா கொடுக்கலாம். 45 நாள் இருக்கிறது; போதும். நமக்கும் பிரச்சாரம் பண்ண நாள் வேண்டியதுதான். அதற்குள்ளே நம் மக்களுக்கு உணர்ச்சி மறந்து போகாது. ஆதரவு அதிக மாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன். அன்றைய முதற்கொண்டே நாம் சொல்லி வருகிறோம். இது சுதந்தர நாள் அல்ல, துக்க நாள், மோசடி, நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள் என்று. அதே போல், பிற்பாடு டாக்டர் அம்பேத்காரே ரொம்ப வருத்தப்பட்ட மாதிரி, அரசியல் சட்டமும் ஒரு மோசடி. அது ஒரு மனு தர்ம சாஸ்திரம், பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற காரியம் என்றெல்லாம் நான் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். பெ.-51 -
பக்கம்:தந்தை பெரியார்.pdf/843
தோற்றம்