807 தோழர்களே! நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக, நமது நண்பர் உயர்திரு வீரமணி அவர்கள், நம்முடைய கழக லட்சியச் சொல்லை விளக்கினார்கள்! நானும் விளக் கும்படிக் கேட்டுக் கொண்டேன். அதிலே நம் கழகத் தோழர்களுக்கு ஒன்றும் கஷ்டம் இருக்காது. புதிதாக வருட வர்களுக்கும், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறவர்களுக்கும் கொஞ்சம் சங்கடம் ஏற்பட்டு இருந்தாலும் இருக்கலாம்; என்னடா, கடவுளை இப்படி எல்லாம் சொல்லுகிறான்-என்று, கடவு ளைச் சொல்லுகிறதோடு இருக்காமல் கடவுளை நம்புகிற வர்களைக்கூட முட்டாள் பயல் என்று சொல்லுகிறானேஇது என்னடர்? என்று சிலபேருக்குக் கோபம் வரலாம். கடவுள் சங்கதியை எடுத்தால் ஒருவனுக்கு ஒருவன்நம்பிக்கைக்காரனும் நம்பிக்கை இல்லாதவனும்-அவனை இவன் முட்டாள் என்று சொல்லியாகணும், இவனை அவன் முட்டாள் என்று சொல்லித்தான் ஆகணும். ஆனாலும், நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்க தி பேசுகிறதினாலே, கொஞ்சம் மரியாதையாக மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார்கள்; நம்மைவிட மோசமாக! - - உதாரணமாகச் சொல்லுவேன், நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள், தேவார திருவாசகம் பாடிய நாயன்மார்கள் இவர்களைவிடக் கேவலமாக நாங்கள் சொல்லுவதில்லை; இதை மனத்திலே வையுங்கள். நாங்கள் இவனையோ, இவன் புத்தியையோதான் திட்டு வோம். இவனோ அவர்களது பெண்டாட்டி பிள்ளைகளை யெல்லாம் திட்டுகிறான். தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்பவன், கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டு, வெட்டு என்கிறான். பாட்டிலேயே இப்படி என்றால், காரியத்திலே எப்படி? தேவாரம் பாடினானே சம்பந்தர் என்பவன், கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டியுடன்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/849
தோற்றம்