உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

813 நான் செய்கிறேன். நாம், எல்லோருமே பாடுபட்டதாகத் தெரியணும். - -" நாம் எடுத்துக் கொள்கிற முயற்சியினாலே, நாம் செம் கிற தியாகத்தினால்ே, மற்றவன் வருவான் நம்கூட 5,000 பேர் 10,000 பேர் ஜெயிலில்ே இருக்கிறார்கள் என்றால், ஏனடா இருக்கிறார்கள்? என்று கேட்பான் அல்லவா? பார்ப்பானுடைய தேவடியாள் மகன் என்று இருக்கிறதுக்கு. இஷ்டமில்லை என்று ஜெயிலில் இருக்கிறார்கள் என்றால், அவனும், அடேடே, நம்ம சங்கதி என்ன? என்று கவனிப். பானல்லவா? மலையாளிக்கே இப்போது உணர்ச்சி வந்து விட்டது; நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எனக்கு எழுதியிருக்கிறான். பிறகு, தெலுங்கனும் கன்னடியனும் கவனிப்பான். ஒவ்வொருவனுக்கும் உணர்ச்சி வந்து ஆகனுமே! தமிழ் நாடு தனியாகப் பிரிந்தால், ஒரு பத்து வருஷத் துக்குள்ளாக நாமெல்லாம் 100 வயது வாழ்வோம். ஒவ். வொருவரும் கணித்தனியே இறக்கை வைத்துக் கொண்டு பறப்போம். பெண்கள் இந்திரியம் ஒரு டப்பியிலே, ஆண்கள் இந்திரியம் ஒரு டப்பியிலே பேங்க்கிலே வைத்திருந்து, என்றைக்குப் பிள்ளை தேவையோ அன்றைக்குக் கலந்து, குஞ்சு பொரிப்பது போல் பிள்ளை பெறலாம். எல்லாம். நடக்குமா, நடக்காதா? தமிழன் இந்தியாவிலேயே முதல் நம்பராயிருப்பான். இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய சக்தி உடையவனாகிவிடுவான். ஆகவே நாங்கள் உங்களை ஏய்க்கிறதற்காகப் பொய். யையும், பித்தலாட்டத்தையும், இட்டுக் கட்டிப் பேச வில்லை. நாங்கள் எதையும் சுயநலத்திற்காகச் சொல்ல. வில்லை. 2,000, 3,000, வருஷங்களுக்கு முன்னே, மனிதன் மடையனாய் இருந்த காலத்தில் கற்பித்த கடவுளையும், புராணங்களையும், கற்பனைக் கதைகளையும், இந்து மதத் தையும், ஜாதி அமைப்புகளையும் இன்றைக்கும் நம்ப வேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? நாங்கள் எல்லா