o: 814 ஆதாரங்களையும் கையில் வைத்துக் கொண்டுதான் இப்படிப் பேசுகிறோம்! எனவே, அருமைத் தோழர்களே! நேரtaாயிற்று. மணி 10க்கு மேல் ஆகிவிட்டது. கrதோ எனக்குத் தோன்றியதைத் சொன்னேன். முக்கியமாய்ச் சொன்னதனுடைய கருத் தெல்லாம் நாளைக்கு நடக்கப் போகிற கிளர்ச்சியைப் பற்றி, அதனுடைய தத்துவம், என்ன? அவசியம் என்ன?-என் கிறதை விளக்கினோம். நம் கடமை என்ன என்கிறதை நீங்கள் சிந்திக்க வேணும். உங்கள் கடமை என்றால், டங்கள் ஒருவரைப் பொறுத்ததல்ல. தமிழர் என்று சொல்லுகிற நாம் இத் தனைக் கோடி மக்களையும் பொறுத்தது. பிறகு நாம் வட்டியும் முகலுமாய் உயரலாம். ஒன்றும் தேங்கிப் :ோகாது நம் நாட்டு முன்னேற்றம்-என்று உங்களை வணக்கத்தோடெல்லாம் கேட்டுக்கொண்டு, இந்த ஏற்.ாடு பண்ணி, இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்ததற்கெல் லாம், என்னைக் காது கொடுத் துக் கேட்டதற்கு, என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரி வித்துக் கொண்டு, என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.-- അു &#;!!' கூட்டம் முடிந்து இல்லந் திரும்பினார் பெரியார். படுக்கச் சென்றவருக்கு வலி அதிகமாக இருந்திருக்கிறது. நள்ளிரவுக்கு மேல் சுமார் 2-30 மணியிலிருந்தே தாங்க முடி யாமல் இருந்த நோயை, மிகவும் சிரமப்பட்டுத் தாங்கிப் பொறுத்துக் கொண்டு, பொழுது விடிந்த பிற த சொல்ல லாம்; அதற்குள் ஏன் பிறரைத் தொந்தரவு செய்யவேண்டும் என்று எண்ணியிருக்கிறார். ஆனால் 4-30 மணியளவில், வலி அவரது சக்திக்கும் பொறுமைக்கும் மீறிப் போனதால், மெல்லத் தயக்கத்துடன் வெளியில் சொன்னார். உடனே டாக்டர் கே. ராமச்சந்திராவுக்கு ஃபோன் செய்து வர வழைக்கப்பட்டார். டாக்டரி சரத் சந்திராவும் வந்து பார்த்தார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்குப் பெரியாt
பக்கம்:தந்தை பெரியார்.pdf/856
தோற்றம்