உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/857

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

815 சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். - திருவண்ணாமலைக்கு 21-ந்தேதி வர இயலாதென்று தந்தி கொடுத்துவிடலாம் என்று வீரமணியும் சம்பந்தமும் சொன்ன போது அதெல்லாம் கூடாது. நீங்களா பேசப் போகிறீர்கள்? நான்தானே! அவசியம் போக வேண்டும்!" என்றார் பெரியார். - _மருத்துவமனையில் தந்தை பெரியார். சென்னை டிசம்பர் 21. நேற்று காலை முதல் இரணியா நோய்த் தொல்லையால் அவதிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், முதலில் சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்கள். பின்னர், இன்று அவர்களின் விருப்பப்படியே, வேலூரில் சி. எம். சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்கள். டாக்டர் எச். எஸ். பட் அவர்கள், பெரியார் அவர்களுக்கு ஒய்வு தேவை என்று கூறுவதால், திருவண்ணா மலை, திருப்பத்துார் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தோழர்கள் பொறுத்தருள வேண்டும்’-இதுதான் முதலில் வெளியான செய்தி. டிசம்பர் 22-ம் நாள் பெரியாருக்கு வலி குறைந்து உடல் நிலை தேறி வருகிறது என்று தகவல் தரப் பட்டது. - ஆனால் 22.12-73 இரவு பெரியாருக்கு வலி மிகுந்து விட்டது. துரக்கமில்லாமல் அவதிப்பட்டார். டாக்டர் பட்டும், டாக்டர் ஜான்சனும் அருகிலேயே இருந்து கவனித் தனர். இரவு 1 மணிக்கு டாக்டர் கே. ராமச்சந்திரா சென்னையிலிருந்து வந்து சேர்ந்தார் வேலூருக்கு, மூச்சுத் திணறல் இருந்தது. 4 மணி வரை தொடர்ந்து சிகிச்சை செய்தனர். குறைவதும், மிகுவதுமாயிருந்தது. இந்தச் செய்தி 23 காலை, பத்திரிகைகளில் வந்தது. 23-12-13 ஞாயிற்றுக்கிழமை; சிறிது ஒய்வாக இருந்து வரலாம் என்று முதல்வர் கலைஞர் அப்போதுதான் மாமல்ல .புரம் போய்ச் சேர்ந்திருப்பார்; அமைச்சர் ராஜாராம் சென்னையிலிருந்து தொலைபேசி வழியே அழைத்தார். கருணானந்தம் அவரோடு பேசினார். இணைப்பு சரியா