829. கோவிந்தசாமியால் அமைக்கப்பட்ட, புெரியார் உட்கார்ந்: திருக்கும் வடிவிலான அழகிய சிலை ஒன்றினை, நாவலர் தலைமையில் 25-12-74 மாலை 6.30 மணிக்குத் திறந்து வைத்தார்.அவ்விழாவில் பேசிய பேராசிரியர் கே.அன்பழகன் வயதில் குறைந்தவர்களுக்குச் சிலை எழுப்புவது சரியல்ல என்று கருத்துரைத்தார். விழாவில் என்.வி. நடராசன், சி.பி. சிற்றரசு, மணியம்மையார், வீரமணி ஆகியோர் பேசினர். பெரியாரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே, தான் உயிர் வாழ்வதாகக் கருதும் மணியம்மையார், அடுத்து கலைஞரின் சிலையினை நிறுவுதற்கு, இக்கருத்து அனு: சரணையாக இல்லையே எனக் கவலையுற்றார். வீர மணியைக் கலைஞரிடமும், பேராசிரியரிடமும் சமாதானத். துரதுவராக அனுப்பிப்,பெரியாரின் எண்ணம் ஈடேற, எப்படி.. யும் தான் கலைஞரின் சிலை அமைத்திட உறுதி பூண்டுள்ள தாக அறிவித்தார். சிற்பி எஸ்.பி.பிள்ளை எனப்படும். பக்கிரிசாமி அவர்களால் வடிக்கப்பட்டு, சில காலமாகக் சந்தேகச் சூழ்நிலையால் தாமதப்பட்டு வந்த, கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் சிலையின் திறப்பு விழா, திராவிடர் கழகத்தினரால்,கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. 21-9-1975 ஞாயிறு மாலை 6 மணிக்கு மணியம்மை யாரின் தலைமையில் குன்றக்குடி அடிகளார், சென்னை அண்ணாசாலை, புகாரி ஒட்டல் அருகில், இந்தச் சிலை யினைத் திறந்து வைத்தார்கள். மாநிலமெங்கணும் இருந்து திராவிடர் கழகச் செயல் வீரர்களும், கருஞ்சட்டைத். தோழர்களும் விழா சிறக்க வருகை தந்தனர். - ராஜா சர் முத்தையாச் செட்டியார் முன்னிலையில் மணலி கந்தசாமி உரையாற்றினார். முன்னதாக நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் குழுவினர் நாயன இசைமழை பொழிந் தனர். விழாவில் கி.வீரமணி, சைதை எஸ்.பி. தட்சிணா மூர்த்தி, சி.பி. இராசமாணிக்கம், கு. கிருஷ்ணசாமி, அ. ஆறுமுகம், ஆம்பூர் ஏ. பெருமாள், டி.டி வீரப்பா, பொத்தனூர் க. சண்முகம், கோவை இராமச்சந்திரன், எம். என். நஞ்சையா, குமரிமாவட்டம் கிருஷ்ணன் ஆகியோர்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/869
தோற்றம்