உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/872

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 அம்மையார் தன்லைமையில் வடநாட்டு மத்திய அமைச்சர் களுக்குக் கருப்புக்கொடி காட்டப்பட்டது. அஞ்சல்மனைகள் முன்பு மறியல் நடத்தப்பட்டது. மணியம்மையார் அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலையத்தின்முன் மறியல் செய்தார்கள். காமராஜர் 1975 அக்டோபர் இரண்டாம்நாள் மறைத் தார். அண்ணாவுக்கும், இராஜாஜிக்கும், பெரியாருக்கும் நினைவிடங்கள் அமைத்துச் சிறப்பித்த கலைஞர், காமராச ருக்கும் நினைவுமண்டபம் எழுப்பினார்; அவரது மறை வுக்குப் பிரதமர் வந்து சென்றார்; என்ன முடிவோடு?! சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தோற்றுவித்து 50 ஆண்டுகள் ஆயின. மகத்தான சமுதாயப் புரட்சியை விளைவித்த அம்மாபெரும் இயக்கத்திற்குப் பொன்விழா வேண்டாமா? பெரியார் இல்லாக குறை தெரியாவண்ணம் கொண்டாட வேண்டுமே பெரியாரின் சுயமரியாதை இயக்க மெனும் பிராணவாயுவைச் சுவாசித்த புழுவும் புலியாகி யிருக்கிறதே! புல்லும் மரமாகி யிருக்கிறதே! கல்லும் களி மண்ணும் நல்ல மனிதனாகியிருக்கிறதே! மறக்கலாமா? என்று அந்த விழாவினைத் தஞ்சைத் திருநகரில் கொண்டாட முடிவெடுத்தனர். 1975 டிசம்பர் மூன்றாம் வாரத்தில், 22 முதல் 24 முடிய தஞ்சை திலகர் திடலில் அமைக்கப்பட்ட பந்தலில் பெருவிழா; பொன்விழா முதல்வரும், அலைச்சர் பெருமக்களும், கழகத் தோழர்களும், கருஞ் சட்டை வீரர் களும் பங்கேற்க ஏற்பாடு, 0 ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தோர், இப்போது எத்தனை பேர் உயிருடனிருப்பர்? நாகை என்.பி. காளியப்பன் தவிர வேறு யாரும் நிலைத்திருப்பதாக நினைவுக்கு வரவில்லையே! எனவே, குறைந்த பட்சம் வெள்ளிவிழாக் கானும் அளவுக்காவது-அதாவது ஒர் இருபத்தைந்தாண்டு காலாக வாவத-இயக்கத்தில் இருப்போர்க்குக் கேடயம் வழங்கவும் ஏற்பாடு. தஞ்சையில், சுயமரியாதை இயக்கப் பொன்விழாடெல்லியில், திராவிட இயக்கங்களுக்குக் குழிபறிக்கும் சதி விழா. இரண்டும் ஒரே நேரத்தில் அமைந்தன: தஞ்சை