உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83th லுள்ள பெரியாரின் சிலையை, மத்திய அமைச்சர் ஜெக ஜீவன்ராம் அவர்களைக் கொண்டு திறந்து வைத்தார். விழாவில் கலந்துகொண்ட மணியம்மையார், "பெரியார் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு காரியம் நிறை வேறாமலே நிற்கிறது. அனைத்துச் சாதியாரும் அர்ச்சக ராகலாம் என்ற தமிழ் நாடு அரசின் சட்டம், உச்ச நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டது. அதற்கு உயிரூட்ட, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். மத்திய அரசின் உதவியோடு இக்காரியம் தடைபெற, நமது மாநில அரசு மு லவேண்டும்!' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பதிலளித்த முதல்வர், "கடவுளே இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார். மற்றவர் களைக் கோயிலுக்குப் போகாதீர்கள் என்று சொன்னவர் பெரியார். அப்படிப்பட்ட கொள்கை உடையவர், கோயி லுக்குப் போய் அர்ச்சனை செய்யச் சொல்வதும், எல்லா சாதியாருக்கும் அந்த உரிமை வேண்டும் என்று சொல்வதும், உண்மையில் பெரியார் சொல்லியிருப்பாரா? என்று என்னால் நம்ப முடியவில்லையே!' என்றார். 1911 அக்டோபர் 30-ம் நாள் மணியம்மையார் கைது செய்யப்பட்டார். ஏன்? தெரியவில்லை! வழக்கொன்றும் தாக்கல் செய்யப்படவில்லை. பின், விடுதலை செய்யப் பட்டார். இந்திராகாந்தி 1977 அக்டோபர் 30-ஆம் நாள் தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது என திராவிடர் கழகம் முடிவெடுத்தது. மணியம்மையார் முன்னின்று நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டொரு நாட் களுக்குப் பின், தாங்களும் கருப்புக் கொடி காட்டப் போவ தாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் முடிவெடுத் தனர். சென்னையில் கிண்டியருகில் வேனில் வந்த மணி யம்மையுாரை, இழிவாகவும் தரக்குறைவாகவும் பெரிய ஒரு போலிஸ் அதிகாரியும், போக்குவாத்து சார்ஜண்ட் ஒருவரும் பேசினர், வீரமணியையும் திட்டினார்கள். இதுவரையில் င္ရန္ကို % அவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.அம்மையாரும்