838 யம்மையார் எழுதி வைத்திருந்த கடிதத்தின்படி, ஒரே மன தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிடர் கழகத்திற்கு இனித் தலைவர்கிடையாது என்றும்,முடிவெடுக்கப்பட்டது. பொருளாளராகத் தஞ்சை கா. மா. குப்புசாமி, பிரச்சாரச் செயலாளராகத் திருச்சி என். செல்வேந்திரன், விவசாயப் பிரிவுச் செயலாளராக ஏ. எம். ஜோசப், அமைப்புச் செய லாளராகக் கள்ளக்குறிச்சி கோ. சாமிதுரை எம். ஏ. பி.எல். தலைமைக் கழகச் செயலாளராக எஸ். துரைசாமி பி.ஏ. பி. எல்., இளைஞர் பிரிவுச் செயலாளராகக் கோவை கு. இராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்படுகின்றனர். சுய மரியாதை இயக்கப் பொன் விழாவுக்குப் பெரியார் இல்லாமை; பெரியார் நூற்றாண்டு விழாவுக்கும் மணியம் மையார் இல்லாமை;எனினும் பெரியார் தந்த சுயமரியாதைச் சுடர், பகுத்தறிவு ஒளி விளக்கு ஓயாமல் எரிந்து வெளிச்சந்: தந்து வருகின்றது. பெரியார் தொடங்கி நடத்திய பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் திராவிடர் கழகத்தாரால் தொடர்ந்து நடத்தப் படுகின்றன. விடுதலை', 'உண்மை', 'The Modern Rationalist போன்ற பத்திரிகைகள்-நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சுயமரியாதைப் பிரச்சார டிரஸ்டின் தலைவராக சிவகங்கை சண்முகநாதனும், செய லாளராக வீரமணியும் உள்ளனர். இன்றையத் தமிழ் நாடு அரசும் பெரியார் நூற்றாண்டில் பல ஆக்கபூர்வமான செயல் திட்டங் களை அறிவித்தது. பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர் திருத்த முறை அமுலுக்குக் கொண்டு வர்ப்பட்டது, அரசாணை ஒன்றின் வாயிலாக கோவைமாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஈரோடு தலைநகராகக் கொண்ட பெரியார் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியrt பல்கலைக் கழகம் ஒன்று கோவையில் அமைக்கப்பட இருக்கிறது. பெரியார் புரட்சி மொழிகள் நூல் வெளி வந்துள்ளது. பெரியார் வாழ்க்கை வரலாறும், படக் கதையும் நூல்வடிவில் தயாராகி வருகின்றன. பெரியார் பொன் மொழிகள் கல்லில் வடிக்கப்பட்டுப் பேரூர் களில் நிறுவப்படஇருக்கின்றன. பெரிய திட்டமாகப் பெரியார்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/878
தோற்றம்