உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/880

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840, யம்மை குழந்தைகள் இல்லத்தில், 2 மாதத்திலிருந்து 7 வயது வரையில், பல குழந்தைகள் (Foundlings) வளர்க்கப்படு கின்றன. அவற்றுக்கெல்லாம் EVRM என்ற இனிஷியல் தரப்பட்டுள்ளது. கொழு கொழு குழந்தைகள்' போட்டியில் இந்த இல்லத்திலுள்ள 2 வயது வைக்கமதி பரிசு பெற். றுள்ளது. பெரியார் நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், திேய உணவு வழங்கப்படுகின்றது. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும் பணி எவ்வளவு சிறப்பாகப் பெரியாரின் சந் கதியrாால் பேணப் படுகின்றது. இமயமலை வெய்யிலிலே காய்கிறதே என்று குடை பிடிக்கக் கிளம்பியதுபோல்' என்று பெரியாரே குறிப் பிட்ட உவமையின் பிரகாரம், தாழ்ந்து வீழ்ந்த இனத்தின் தலை நிமிர்த்தப் பெரியார் நிறுவிய அறச்செயல்களின் திறமும் உரமும் எத்துணைச் சிறப்பானவை! பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துடைய சொத்துகளுக்கு வருமான வரித் துறையினர் பல லட்சம் வரி விதித்து, டிரிப்யூனல் அப்பிலில் வரி விதிப்பு கள்ளுபடி செய்யப்பட்டது 1979-ல். பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டிப் பொதுச் செயலாளர் கி. வீரமணியிடம் 100 சவரனுக்குச் சமமான தொகை திரட்டித் தஞ்சையில் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் மகளிர் பாலி டெக்னிக் நிறுவிட இத்தொகை முன்னோட்டமாகச் செல விடப்படும் என்றார் வீரமணி. பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க மலேசியா, சிங்கப்பூர், குவெய்த் போன்ற வெளிநாட்டுத் தோழர்கள் வந்திருந்தனர். சிங்கப்பூர் நாகரத்தினம், மலேசியா கே. ஆர். ராமசாமி, குவெய்த் செல்லப் பெருமாள், இலங்கைத் தோழர்கள் ஆகியோர் விழாக்களில் பங்கேற்றுச் சென்றனர். திருத்தணி, சென்னை, கன்னியாகுமரி, சிக்கில் ஆகிய இடங்களிலிருந்து கால்நடையாகப் பிரச்சாரப் படைகள் புறப்பட்டு வந்தன. நூற்றாண்டு நாயகர் பெரியார் என்ற ஒரு திரைப் படமும், இல,இசைக் தட்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.