. 841 பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழகச் சார்பில் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண் டாடப் பெற்றது. தஞ்சையில் பெரியார் பெருந்தொண் டர்' என்ற கேடயம், நெடுநாளையத் தொண்டர்களுக்குப் பொதுச் செயலாளரால் வழங்கப் பெற்றது. - பெரியார் பயன்படுத்திய பொருள்கள், அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்ற நன்கொடைப் பொருள்கள், வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒவியங்கள் ஆகியவை பெரியார் திடலில் பெரியாரும், மணியம்மையாரும் தங்கி யிருந்த அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெரியார் காட்சியகம் திறப்பு விழாவும், பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனைக்கு நான்கு மாடிக் கட்டடம் ஒன்று பெரியார் திடலில் கட்டப்பட அடிக்கல் நாட்டலும், இந்தியப் பிரதமர் சவுதரி சரண்சிங் அவர்களால் 24.11-1979 நண்பகலில் நிகழ்த்தப் பெற்றன. (ஆளுநர் பிரதமரின் பணிகளை நிறைவேற்றினார்) 17-9.1979 அன்று திருச்சியில் மறைந்த நடிகவேள் எம்.ஆர். ராதா நினைவாகப், பெரியார். திடலில் அமைக்கப் பட்டிருந்த ராதா மன்றம் புதுப்பிக்கப் பெற்றது. பெரியார் மணியம்மையார் படங்கள் திறக்கப் பட்டன. வகுப்புரிமைக்குக் குழிபறித்த 2-7-1979 தேதியிட்ட அரசாணைக்குத் தீயிடும் கிளர்ச்சி 26-11-1979 அன்று நாடெங்கும் திராவிடர் கழகத்தால் நிகழ்த்தப் பெற்றது!
பக்கம்:தந்தை பெரியார்.pdf/881
தோற்றம்