846 பழக்கமே, தமது உண்கலத்தில் பரிமாறப்பட்ட உணவை மீதியாக்காமல் சாப்பிட்டு, அஜிர்ணத்தால் அவதிப்படுவது தானே! நேற்று ஒரு பண்டத்தைச் சாப்பிட்டு, அது Gaerflak காமல் தொந்தரவு கொடுக்கிறது என்று தெரிந்தாலும், இன்றும் அதே பண்டம் வைக்கப்பட்டால், மறுக்காமல் சாப்பிட்டுத் துன்பப்படுவது வாடிக்கை, பெரியாருக்கு. வெளியூர்ப் பயணங்களின்போது தம்முடன் வருகின்ற தோழர்கள், உதவியாளர்கள், டிரைவர் முதலியோரும் சாப் பிட்டார்களா என்று தெரிந்து கொள்வார். பெரும்பா லும் உடன் அமர்த்திக்கொண்டே உண்டார்; அல்லது அவர்கள் சாப்பாடு முடிந்த பிறகே புறப்படுவார். இதுவும் Guihuitrifier தனிப் பண்பாடாகும். துவக்க நாட்களில் குதிரை பூட்டிய சாரட்டு வண்டியில் சவாரி செய்தவர், பிறகு ஒரு கார் வைத்திருந்தார். இடைக் காலத்தில் 1944 வரை ஈரோட்டில் ஒரு சாதாரண ஒற்றை மாட்டு வண்டிதான் பெரியாரிடம் இருந்தது; யுத்த காலமாக இருந்ததால் கார் வைத்துக் கொள்ளவில்லை. இரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்து வந்தார். வேறு யாராவது அவருக்காக இரண்டாம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு டிக்கட் வாங்கி வந்துவிட்டால்கூட, வருத்தபடு வார்; அதைத் திருப்பித் தந்து, மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்; அதில் மிச்சமாகும் பணத்தை நிதியில் சேர்த்து விடுவார் பெரியார் புகைவண்டி வருவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே நிலையத்தை அடைந் துவிடுவார். இதை யாராவது தாமதப்படு த்தினால், அவர்கள் பெரியாரின் இடுங்கோபத்துக்கு ஆளாகவேண்டும்! குறிப்பிட்ட நேரம் தவறாமல் எந்த நிகழ்ச்சிக்கும் G&á s»flh Punctuality wrsŵgyub பண்பினை அவரளவு சரியாகக் கடைப்பிடித்த தலைவர் உலகிலேயே வேறு எவருமிலர். அதே போல், தாம் ஒத்துக்கொண்ட நிகழ்ச்சி களுக்கும் கட்டாயம் எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல் சென்று விடுவார். . 9. காலை 6 மணிக்குமேல் பெரியார் உறங்குவதில்லை.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/886
தோற்றம்