847 காலைக் கடன்களை முடிக்கும் போதே சில பத்திரிகை களைப் படித்து முடித்துவிடுவார். இரண்டு மூன்று இட்லியும் காப்பியும் காலை உண்டி. மீண்டும் பத்திரிகை படித்தல், பேசிக்கொண்டிருத்தல், புத்தகம் படித்தல், எழுதுதல், கடிதங்கள் பார்த்துப் பதில் வரைதல், மதிய உணவு கட்டாயம் புலாலுடன். பின்னர் சிறிது பொழுது கண் அயர்தல். பிஸ்கட், மலைவாழைப்பழம், காப்பி-சிற்றுண்டி. பயணநேரங்களில் வேனிலேயே உண்ணல், உறங்கல்! இரவு ணவு பெரும்பாலும் இட்லி. ஒய்வாகச் சாய்ந்துகிடப்பது அவர் வாழ்க்கையில் நடவாத ஒன்று. கார் பேட்டரி ஒட்டத்தில் சார்ஜ் ஆவதுபோல், பெரியாருடைய உடலும் உழைப்பில்தான் உற்சாகம் பெற்றது. 5 முழ வேட்டி (பின்னாட்களில் கயிலி), உடம்பில் உள்ளே மெல்லிய வெள்ளைத் துணியில் அரைக்கைச்சட்டைக் அதிலுள்ள பையில் மணியர்ஸ்! மேலே முக்கால்கை கருப்புச் சட்டை (1945 முதல்); அதன் பைகளில்-டயரி, கண்ணாடிக் கூடு, முக்கிய காகிதங்கள், தடியான பேனா, பின்னாட் களில் ஒரு பெரிய லென்ஸ்-ஆகியவை. மேலே, துடைப் பதற்காகும் துண்டு ஒன்று; எப்போதும் நீங்காத பிரம்புக் கைத்தடி; குளிர் காலத்தில் ஒரு கம்பளிச்சால்வை; செருப்புகள்; பழைய ஃபிரேமில் அடங்கிய மூக்குக் கண்ணாடி-குளிப்பதும், துணிகளைத் துவைப்பதும், உடை மாற்றுவதும் அன்றாடக் கடமைகளாகக் கருதியோ, அவரே விரும்பியோ செய்து கொண்டதில்லை, என்றுமே! அம்மை யாரின் தொண்டில் இவையும் இணைந்தவை! "நான் (decency) சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதிகப் பணம்கொண்ட, -மக்கள் கவனத்தை ஈர்க்கத்தக்க -ஃபாஷன்நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல; (Simple) சாதாரணக் குறைந்த தன்மையில் முடியும் என்று சொல்வேன்' என்கிறார் பெரியார். கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் இவற்றிலிருந்து வேறுபட்டதல்லவா சிக்கனம்? இது சேமிப்புக்கு அடிப்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/887
தோற்றம்