848 படையாயிற்றே சிக்கனமாயிருந்து சேமித்த சொத் துகள், இன்று எப்படிப் பல்கிப் பெருகிச் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு ஆதாரமாக நிறைந்து விளங்குகின்றன! பெரியார் என்ற தனி மனிதரின் எளிமைதானே இதற்குக் காரணம்? புத்தகம் வாங்குவதில் அவர் சிக்கனம் கூடப் பார்ப்பதில்லை, ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக்கிறது. 50 ரூபாய் விலை, ஆனால் நமக்கு உதவக்கூடியது' என்று தயக்கத்துடன் தலையைச் சொரியும் வீரமணியை விளித்து, "இந்தாப்பா இரண்டு புத்தமாக வாங்கிவா!' என்று பளில் சென்று கூறி, உள்சட்டைப் பையிலுள்ள பர்சை எடுத்து, மெல்லத் திறந்து, மெல்ல ஒரு நூறு ரூபாய்த்தாளை வெளியில் எடுத்து, மீதியை மெல்ல ஒருமுறை எண்ணிப் பார்த்து, மீண்டும் பர்சை உள் சட்டைப்பையில் மெதுவாகத் திணித்து, வாய்ப்புறத்தில் ஒர் ஊக்கை மாட்டிப், பின்பு, டயரியை வெளியில் எடுத்து, தேதியுடன், 100 ரூபாய் செலவுக்கான விவரத்தை மறக்காமல் அதில் குறித்துக் கொள்வார் பெரியார், இரயில் பயணம் செய்யும் காலத்தில்-சந்திப்புகளில் வண்டி மாற்றும்போதும், ஏறும்போதும், இறங்கும்போதும் -கையிலுள்ள பெட்டி, ஹோல்டால் போன்ற தமது லக்கேஜ்களை எடுப்பதற்குக் கூலி போர்ட்டர்களை அழைக்க மாட்டார். இருக்கின்ற சாமான்களில் தாமே ஒன்றை முந்திக் கையில் எடுத்துக்கொள்வார். உடன் வருகின்ற மற்றவர்கள் ஆளுக்கு ஒரு சாமான் சுமந்துதானே ரே வேண்டும்? மிகுந்த கனமான 3, 4 புத்தகச் சிப்பங்களை அப்போதெல்லாம் மணியம்மையார் பொறுமையுடன் தூக்கிச் செல்வதுண்டு. 'நானே ஒரு முட்டையைச் சுமக்கும் போது, அதன் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, அது ஒர் அவமானம் தரக்கூடிய இழிவான செயல் என்று நான்கருதியதில்லை-' என்று பெரியாரே சொல்கிறாரே! "தந்தையார் வெங்கட்டநாயக்கர் தம் சொத்துகளை ஒரு டிர்ஸ்டாக ஏற்படுத்திடக் காரணமே, பெரியாரல்ல;
பக்கம்:தந்தை பெரியார்.pdf/888
தோற்றம்