உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/889

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

849 பெரியவர் ஈ.வெ.கி. தான். அவர் மிகுந்த செலவாளி. ஈ.வெ. கிருஷ்ணசாமியாரின் முதல் மனைவி நாகம்மாள், சேலம் தாதம்பட்டி எம். ராஜூவின் அத்தை. இவருக்குப் பிறந்த ரங்கராம், தாயாரம்மாள் ஆகிய இரு குழந்தை களும் மதனப்பள்ளி சானடோரியத்தில் இற ந் து விட்டனர். இங்கிலாந்தில் பயின்று வந்தவரான ரங்க ராமுக்கு, ஆனைமலையில் ரங்கநாயகி அம்மையாரைப். பெண்பார்த்து வைத்திருந்த போது, அவர் இறந்து போன தால், ஈ.வெ.கி. தமது முதல் மனைவி உயிருடன் இருந்த போதே, இந்த ரங்கநாயகி அம்மாளை இரண்டாந்தார மாக மணந்து கொண்டார். இவருக்கு மிராண்டா (தீன தயாளு) சம்பத் (சம்பத் குமார வேங்கடவரதன்) இரு குழந்தைகள் பிறந்த பின்னரே, 1921-ம் ஆண்டில் முதல் மனைவி நாகம்மாள் மறைந்து போய்விட்டார். சிக்கன மில்லாத ஈ.வெ.கி. ஒரு முறை 10,000 ரூபாய் கடன்பட்டு விட்டார். வெங்கட்டநாயக்கர் அறிந்து வருந்தி, பத்தாயிரம் ஒரு ரூபாய் வெள்ளிப்பண நாணயங்களை ஒரு விசுப்பலகை மீது வரிசையாக அடுக்கி வைத்து, இந்தப்பா கிருஷ்ணா! உன்னை இன்றைக்கு நான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறேன்! இனிமேலாவது, இதோ உன் தம்பி ராமனைப் போலச் சிக்கனமாக நடந்துகொள்!" என்று கூறினார். தந்தையார் பார்வையில் பெரியார் எப் படிக் கருதப்பட்டார் என்பதை விளக்கும் நிகழ்ச்சியன்றோ து! - இ தனிப்பட்டவர் யாருக்காகவும் எவரிடத்திலும் எப் போதும் பெரியார் சிபாரிசு செய்ததில்லை; ஒரே ஒருவருக் காக மட்டும் மூன்று முதலமைச்சர்களிடத்தில் பரிந்துரை புரிந்துள்ளார். கல்வித்துறை இயக்குநராக்குமாறு காமராச ரிடமும், கல்வி ஆலோசகராகப் போடுமாறு அண்ணாவிடத் திலும், துணைவேந்தராக்குமாறு இரண்டு தடவை கலைஞரிடமும், பெரியார் தாமே தமது இயல்புக்கு மாறாகச் போரிசு செய்திருக்கிறார்.