851 நலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத் தது. எனவே, தமிழர்களைக் காணுந்தொறும், நினைக்குந் தொறும் நெஞ்சம் பகீரென்கிறது: -- - செல்வம் நினைவு பெரியாரை எவ்வளவு தூரம், எதற் காக வாட்டியது என்பது புரியும்போது, பொது நல ஊழியர் கள்பால் அவருக்கிருந்த பற்று, பாசத்தின் உயர்வு, வெளிப் படுகின்றதல்லவா? . - பெரியாருக்கு இசையில் ஈடுபாடும், ஞானமும் உண்டு. நகைச்சுவை உணர்ச்சியும், நையாண்டியும் நளினமாக இழையோட, அவர் சில நேரங்களில் பேசுவதுண்டு. தெற்குச் சீமையிலிருந்து தொண்டர் ஒருவர் குடும்பத்துடன் பெரியாரைக் காணவந்திருந்தார். அடுக்கடுக்காகப் பத்துப் பன்னிரண்டு பிள்ளைகள் அவருக்கு. அவர் சென்றதும், அருகிலிருந்த தமது தோழர்களிடம் பெரியார், அய்யா வுக்கு ஊரில் தொழில் எப்படி?” என்று கேட்டார்; 'பிள்ளை பெறுவது தவிர வேறு வேலை இல்லையோ' என்பதையே நாசுக்காகக் கேட்டார்! - -- - - 1970-ல் பம்பாய்ப் பயணத்தின் போது தஞ்சை கா. மா. குப்புசாமியின் கார் ஒன்றும் பெரியாரின் வேனைத் தொடர்ந்து வந்தது. ஆடவர்கள் காரிலும் மகளிர் வேனிலும் பயணம் செய்தனர். எங்கேயாவது வேன் நின்றால், காரிலிருக்கும் ஆண்கள் இறங்கி ஓடி, அய்யா என்ன?’ என்று வேனுக்குள் ஏறுவார்கள். "அவர்கள் உண்மையில் என்னைப்பார்க்கவா இப்படி ஓடிவருகிறார்கள்? ஏன் அம்மா' என்பார் பெரியார். தத்தம் மனைவிமர்ர் களைக் கானும் ஆவலில் வருவதாக, இலைமறைகாயாகப் வெரியார் எடுத்துக் காட்டினார்! சின்ாவில் ஆடவரும் மகளிரும் ஒரேமாதிரியான tiர் ஆடை அணிவது போல் நம் நாட்டிலும் இருக்க் வேண்டும் என்பது பெரியார் கொள்கை. இதை முதலில் இந்ாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அமுல் செய்யலாம் என்று ஒருவர் ஆலோசனை கூறினார். பெரியாரின் அருகிலிருந்த மணியம்மையார், அப்படியானால் 110 செட்'
பக்கம்:தந்தை பெரியார்.pdf/899
தோற்றம்