உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/901

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

853 விடுங்கள் என்கின்ற நிபந் தனையின் பேரில்தான் நான் எதையும் தெரிவிக்கின்றேன்” என்கிறாரே, இவர்தாம் பெரியார்! . . . . . . . சுயமரியாதை இயக்கம் என்கிற இஞ்சினைப் பலப் படுத்தி, அது சரியாக ஒடத், தகுந்த சத்தியை உண்டாக்கி வைத்து விட்டால், பிறகு எந்த இயந்திரத்தைக்கொண்டு வந்து அதோடு இணைத்துத், தோல்பட்டையை மாட்டி விட்டாலும், அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் (Government) இருக்க வேண்டும் என்கிற கவலை யாருக்கும் வேண்டியதில்லை!" எவ்வளவு நம்பிக்கையோடு நவிலப்பெற்ற தென் பூட்டும் மொழிகள் இவை: பெரியார் தவிர வேறு யாரால் சொல்ல இயலும்? இந்தியாவில் இந்திரா ஆட்சி உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது, பத்திரிகைத் தணிக்கை முறை அமுலானபோது, மிசா சட்டத்தின் கீழ் பல கட்சித் தலைவர்கள் சிறையிடப்பட்டபோது, பச்சைத் தமிழர் காமராசர் மனம் வெதும்பி மறைந்த போது, தனித் தமிழராட்சியை டிஸ்மிஸ் செய்து-முதன் முறையாகத் தமிழகத்தில் குடிஅரசுத் தலைவராட்சி அமுலானபோது, அட்வைசர்கள் எனும் பார்ப்பன அதிகாரிகள் தந்தை பெரியாரின் 60 ஆண்டு உழைப்பின் பலனை அழித்தொழித்த போது, சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்ட போது, தி. க., தி. மு. க. தலைவர்கள் பலரைச் சிறையிலிட்டு அடித்து உதைத்துச் சித்திரவதை செய்தபோது,ஓராண்டுக்கு மேலும் கொடிய அடக்குமுறை ராணுவ ஆட்சிபோல் தலை விரித்தாடியபோது, அனைத் துக்கும் முடிவு கட்டுவதுபோல் மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இழிந்து-சுதந்திரம் பெற்ற 3ம் ஆண்டுக் காலத்திலேயே முதன் முறையாக ஜனதாக்கட்சி அரசுக்கட்டிலில் அமர்ந்தபோது: மாநிலத்தில் அய்யா அண்ணா வழி என்று சொல்க் கொள்ளும் திராவிட பாரம்பtய அ. இ. அ.தி. மு. * ஆட்சியே ஆளவந்த,