வாழ்க்கை வரலாறு
தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டம் கடலூர் அருகேயுள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தர சண்முகனார் 13.7.1922 ஆம் நாளன்று தோன்றினார். இவருடைய தந்தையார் பெயர் சுந்தரம். தாயார் பெயர் அன்னபூரணி அம்மாள். பெற்றோர் இவருக்கு இட்ட இயற்பெயர் சண்முகம் ஆகும். தன் தந்தையாரின் பெயராகிய சுந்தரத்தையும் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டு சுந்தர சண்முகனார் ஆனார். முதுபெரும்புலவர் அமரர் நடேச முதலியார், பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் முதலானோர் இவருடைய ஊரினர் மற்றும் உறவினர்கள் ஆவர்.
சில ஆண்டுகள் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் பள்ளியில் பயின்ற இவருடைய மாணவப் பருவத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்தத் திருப்புமுனை இவருடைய ஆழ்ந்த தமிழ்ப்புலமைக்கு அடித்தளம் இட்டது. அந்தத் திருப்புமுனை இவர் திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடாலயத்தில் மாணக்கராகச் சேர்ந்தது. அதுவும் ஞானியார் அடிகளார்களிலேயே மிகவும் புகழ் பெற்றவரும் புலமை பெற்றவருமான ஐந்தாம் பட்டத்து அடிகளின் மாணாக்கராக. ஞானியார் அடிகளாரின் அறிவுரையின் பேரில் திருவையாறு அரசர் கல்லூரியில் தன்னுடைய பதினான்காவது அகவையிலேயே வித்துவான் படிப்பில் சேர்ந்தார். வித்துவான் படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு ஞானியார் அடிகளாரின் பரிந்துரையின் பேரில் மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் 1940 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய பதினெட்டாவது அகவையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். தன்னுடைய இருபத்திரண்டாவது அகவையில் 26.5.1944