சுந்தர சண்முகனார்
11
எழுதி வெளியிட்டுத் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் பேசப்படுவராக உயர்ந்தார். மேற்கூறிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு முன்னோடி நூல்களாகும்.
திறமையைத் தேடி வாய்ப்புகள் ஓடிவரும் என்பதற்கேற்ப இவருடைய புலமைக்குப் பரிசாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முனைவர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் இவருக்குப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் பதவியை வழங்கினார். 1982- ஆம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தவர் உடல்நலக் குறைவு காரணமாக 1983 - ஆம் ஆண்டு இப்பணியிலிருந்து விலகிவந்துவிட்டார். உடன் பிறந்தே கொல்லும் நோய் என்பது இவர் வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும். மயிலம் தமிழ்க் கல்லூரிப் பணியை விட்டு விலகியதற்குக் காரணமே இவருடைய உடல்நலக் குறைவு
தான்.
1946 - ஆம் ஆண்டிலிருந்து நோயுடன் போராடிப் போராடி வெற்றிகண்டு வந்த இவரை 1997 - ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30 - ஆம் நாளன்று நோய் இறுதியாக வென்றது.
இவர் எழுதிய நூல்கள் அறுபத்து ஒன்பது ஆகும். இவற்றுள் கவிதை நூல்கள் 9, காப்பியங்கள் 2, உரைநடை நூல்கள் 19, திருக்குறள் ஆய்வுகள் 5, கம்பராமாயண திறனாய்வுகள் 6, அறிவியல் ஆய்வுகள் 6, இலக்கணம் 2, மொழியியல் 3, தொகுப்பியல் 2, முழுஉரைநூல்கள் 7, புதினம் 2, சிலப்பதிகாரத் திறனாய்வு 1, வரலாற்று நூல்கள் 4, மற்றும் சிறுகதைத் தொகுப்பு 1 ஆகும். பல துறைகளிலும் நூல்கள் எழுதிய இவரின் சான்றாண்மையைப் பாராட்டி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டத்தை 17.10.1991 அன்று