28
தனித்தமிழ்க் கிளர்ச்சி
மடியின்றித் தம்முயிர்போல் மன்னுயிரைக் காத்ததமிழ்
முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானை
முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர்
அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானை
ஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை (46)
புலவர்
அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள்
சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானை
சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின்
இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானை
நன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை(47)
வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள்
அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானை
அரசர் அடங்கிமிக அரசாண்டா ராமாகில்
அரசரினும் புலவர்தம் ஆற்றலென்ன அம்மானை
ஆற்றல் தமிழ்தந்த ஆற்றலே அம்மானை (48)
45 - அன்று வடக்கே படையெடுத்துச் சென்று, வடநாடு முழுவதையும் வென்று, இமயமலையில் தமிழ்க்கொடி நாட்டி, இந்தியா முழுவதும் தமிழையே பொதுமொழியாக வைத்து ஆண்டதால் இமயவரம்பன் என ஒரு சேரன் பெயர் பெற்றான். ஆனால், இன்று தமிழ்நாடு தமிழர்க்குக் கிடைத்தால் போதும்.
48 - பண்டையக் காலத்தில் அரசர்கள் தமிழ்ப்புலவர்களின் வாக்கைத் தட்டாது அடங்கி அரசாண்டு வந்தார்கள். காரணம் புலவர்களின் தமிழாற்றலே.