பக்கம்:தன்னுணர்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தன்னுணர்வு



*

[ஆங்கிலத்தில் எமர்சன் எழுதிய SELF RELIANCE என்ற அருமையான கட்டுரைப் பிழிவைத் தழுவியதாகும் இச் சுருக்கம். ஒவ்வொரு மாந்தனின் உள் மனத்தே அவ்வப்பொழுது பளிச்சிடும் அறிவுணர்வின் பேராற்றலை எடுத்து விளக்கி, அவ்வுணர்வின் முதிர்வால் முற்றுப்பெறும் மாந்த வாழ்க்கையின் உண்மை உருவத்தை வெளிப்படுத்துகின்றது இவ்வரிய கட்டுரை அறிவுணர்வு வேட்கையுற்று, நல்லறிவுக்கு அலைந்து திரிகின்ற, மெய்யுணர்வு முளையிடும் இளைஞர், பன்முறை இதனை ஊன்றிக் கற்றுத் தெளிந்து தேர்வாராக.]

இடுக நும் பிள்ளையை மாமலை மேல்விளை யாடுதற்கே!
விடுக செந் நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்!
கெடுக வன் அச்சம்! நரியொடும் நாயொடும் கேண்மையுற
நடுக நீ, நன் மறம் நெஞ்சில், வினையில், நரம்பிலுமே!


ஓர் உணர்வுப் புலவனின் ஆழ்ந்த உள்ளத்தினின்று உணர்வெடுத்துப் பொங்கும் பாக்களின் உட்பொருள் என்ன வாக விருப்பினும், அவற்றில் அறிவுணர்வைத் தட்டி யெழுப்பும் சூடு மிகுந்து இருக்கும். அப் பாடல்களின் புறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/13&oldid=1162181" இலிருந்து மீள்விக்கப்பட்டது