பக்கம்:தன்னுணர்வு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

பார்க்காமல், தனக்குத் தன்னையே இணையாக நினைத்துக் கொண்டு பார்த்தால், நம்முள்ளே பொதிந்து வைக்கப் பெற்றிருக்கும் ஒரு பேராற்றலின் ஒளிக்கீற்று நமக்கே நன்கு புலப்படும். அப் பேராற்றல் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும், அது அதுவாக நின்று இயக்குகின்றது

தன்னுணர்வால் முங்கிய தன்னுரிமையின் ஒரு தினையளவே நமக்கிருந்தால் போதும். அரிய பெரிய வல்லாண்மையின் பேரெல்லையைக் காலப்போக்கில் நாம் சிறிது சிறிதாக அடைந்துவிட முடியும்

இப் புடவியெங்கும் நீக்கமற விரிந்து சிறகார்ந்து சுடர் வீசிக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றல் எதுவோ, அதுவே தான் நம்முடைய உள்ளத்திலும், உடலிலும் ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பேராற்றலே அறிவுக்கும் வினைக்கும் வித்து. இத்தகைய உயரிய வித்தை நமக்குள் தரப்பெற்றிருக்கும் புலன் பொறி முதலிய துணைக்கரணப் பொருள்களைக் கொண்டு, நம்மை நாம் பெருமரமாக வளர்த்துக் கொள்வதே நமக்கிட்ட வேலை. அகன்று விரிந்த விசும்பிடை உராய்ந்து திரிகின்ற காற்று, நம்முள்ளும் போய் வந்து கொண்டிருப்பதுபோல், என்றும் நிலையாக உள்ள அப் பேராற்றலையும், அதன் உள் வினைகளையும் மறுப்பது, நம்மை நம் கல்வி கரணியங்களால் மூடிப் புதைத்துக் கொள்வது போலாகும். அவ்வாற்றலின் உண்மைபற்றி நாம் கூற இயலும்படிதான் நமக்கு அறிவு வனையப் பெற்றிருக் கின்றது. நமக்குள்ள அறிவு நம்மை நாம் கண்டு கொள்ளவே அன்றி, நம்மை உண்டாக்கிய பேராற்றலை ஆராய்ந்து கண்டு கொள்வதற்காகத் தரப்படவில்லை. அதை ஆராயும்போது அது நிலைத்துவிடுகின்றது. அந்தப் பேராற்றலைப் பற்றி நாம், அதிகமாகச் சொல்ல இயல்வது இவ்வளவே. மிகவும் இழிவாக நம்மால் கருதப்பெறும் ஒரு பேதையின் உள்ளத் துள்ளும் அவ்வறிவொளி ஊடுருவிக் கொண்டிருக்கின்றது. ஆனால் தனக்கமைந்த வினைபுரி கருவிகளின் தன்மைக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/20&oldid=1162236" இலிருந்து மீள்விக்கப்பட்டது