பக்கம்:தன்னுணர்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12

ஒரு பொருள் தனக்கியல்பான ஆற்றலை வெளிப்படுத்தும் பொழுதே அது பொருளாக நம்மால் மதிக்கப்படுகின்றது. அப்பொழுதுதான் அதுவும் நிலைக்கின்றது.அதன் ஆற்றலை அது கைவிட்டு விடும்பொழுது அதைப் பொருளாக நாம் மதிப்பதில்லை.(கை விளக்கிலுள்ள மின்கலம் (Cell) தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கை மின் விளக்கை (Battery Light) எரிக்கும் வரையில் அதை நாம் மதிப்பதும், அதன் ஆற்றலை இழந்துவிட்டபின், அது தன் மேனிப் பளபளப்பில் எட்டுனையும் குறையாதிருப்பினும், அதனை மதியாது ஒதுக்குவதும் இல்லையா?) தன்னாற்றலை அழுத்தந் திருத்தமாக நம்பிக் காத்துக்கொள்ளாத ஒன்றினை இறையாற்றலும் காப்பதில்லை

மாந்தன் ஒருவன் தன்மேல் தானே நம்பிக்கை கொள்ள முயல்வதில்லை. இவன், பிறர் தன்னை நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன பொருள் இருக்கின்றது?

கோயில்களில் நடக்கும் சொற்பொழிவு, மந்திர மொழி இவற்றின் ஆரவாரத்தைவிட, அதன் பின்பு இருக்கும் அமைதிதான் எனக்கு மிகவும் விருப்பமானது. தன்னைச் சுற்றி அறத்தின் சாயல்களைக் காப்பாக அமைத்துக் கொண்டு இம் மாந்தர் வாழ்வார்களாயின், அவர்தம் மாட்டு எத்தகைய அமைதி, பெருந்தன்மை, திறமை முதலியன சுடர் விடும் தெரியுமா? நம் உயிரொடும் ஊணொடும் நெருங்கியவர்கள் என்னும் பொருட்டிற்காக நம் மனைவி மக்கள், பெற்றோர், உற்றோர் முதலியோர் செய்யும் பிழைகளைச் சரியென்று ஏற்கமுடியுமா?

சிற்சில கால், உன்னை வீண் வேலைகளில் ஈடுபடுத்த இவ்வுலகம் முனைந்து நிற்கும். நீ அமைதியாக இருந்து உன் ஆற்றலை மிகைப்படுத்திக் கொள்ள முயலும்போது, உன் மனைவி மக்கள், நண்பன், இரவலன், நோயாளி, கோழை, ஏழை எல்லாரும் ஒருங்கு கூடி வந்து, உன் அமைதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/24&oldid=1162255" இலிருந்து மீள்விக்கப்பட்டது