பக்கம்:தன்னுணர்வு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15

ருப்பதற்காக- நம் உண்மையான உள்ளத்தின் தன்னுணர்வையும் அதன் பேராற்றலையும், அதன் பெரும்பயனையும் நாம் இழந்துவிட முடியாது. அதுவுமின்றி மெய்த் தனிப்பொருள் இயங்கு முறைப்படி, அவர்கள் எல்லாரும் உண்மை வாயிலை வலிந்து தட்டித் தட்டி அதன் கதவைத் திறக்கக் கெஞ்சும் நேரம் ஒன்று வந்தே தீரும். அப்பொழுது அவர் தாமும் நாம் மேலே கூறியதை ஒப்புக்கொண்டு, அதையே அவரைச் சார்ந்த மற்றவர்க்கும் கூறத் தயங்கமாட்டார்கள்

இவ்வகையில் நாம் உலகத்தார்க்குச் செய்யும் கடமைகள் என்ற காரண முறைப்பாடுகள் தவிர்ந்து போகலாம். ஆனால் அந்த வகைகளின் முடிவிலும் நாம் பெறப்போவது நம் உள்ள ஆற்றலைப் பேணி நடக்கும் முறைதான். அப்படிச் சுற்றிக்கொண்டு வர விரும்புபவர்களும் அவ்வாறே வரட்டும்! மற்றவர்க்காக வன்றித் தனக்குத் தானே வலிந்து பின் பற்றத்தக்க ஒரு பேராற்றலில் நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கை கொண்ட உள்ளம் எஃகுப்போல் நிலைத்து நிற்கட்டும்! அங்கு உண்மையே சூழட்டும்! அதன் அறிவு தெளிவுற்றுப் பொலியட்டும்! அத்தகையவன் தனக்குத் தானாகவும், தானே மக்கள் கூட்டமாகவும், தானே அரசனாகவும் இருக்கவேண்டியிருக்கும்

இந்தக் காலத்தில் உள்ள வாகு போகற்ற மக்கள் கூட்டத்தின் கோணல் மாணலான செய்கைக் குழப்பங்களை ஊன்றிப் பார்ப்பவனுக்கு நாம் கூறுவது எத்தகைய சிறந்த வழி என்று நன்கு விளங்கும். இக்காலத்து மாந்தன் ஒருவனைப் பார்க்கும்பொழுது அவனுடைய உள்ள ஊறல்களும், அறிவு நரம்புகளும் மட்கிப் போய்விட்டன என்று சொல்லிவிடலாம். நாம் தன்னுணர்வற்ற கோழைகளாகி விட்டோம் உண்மையைக் கண்டால் அச்சமாக விருக்கின்றது. நேர்மைக்கும் நமக்கும் வெகு தொலைவு. இறப்பை நினைத்து அலமருகின்றோம். ஒருவரைக் கண்டு ஒருவர் நடுங்குகின்றோம். முழுமையான உள்ள எழுச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/27&oldid=1162287" இலிருந்து மீள்விக்கப்பட்டது