பக்கம்:தன்னுணர்வு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18

அவன் தன் அறிவு ஆழ்ந்து போகப் போக, உள்ளத்தால் மிகுந்த இன்பம் பெறுகின்றான். ஒவ்வொரு சமயமும், அறத் தைப் பற்றியும், கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், தோன்றியுள்ள சில அடிப்படையான உண்மைகளை விடாது பற்றிக்கொண்டு, மனவாற்றலுள்ள ஒருவன் ஏற்படுத்துகின்ற பாகுபாடே, இச் சமயக் கொள்கைகளே உண்மையின் கூறுபாட்டை அறியாதவர் தமக்கு மறைகளாகி விடுகின்றன. அஃது இறைப் பேராற்றலைப் போய் அடையும் ஒரு கருவி என்றறியாமல் அதுவே இறை என்று எண்ணி விடுகின்றனர். அத்தகையோர் அடி வானத்தை உலகத்தின் எல்லையென்று தவறாக நினைத்துக் கொள்பவர் போலப் போலிக் கொள்கையால் மயங்குகின்றனர். புறச் சமயங்களைப் புறக்கணித்து ஏளனப்படுத்துகின்றனர். எல்லாம் வல்ல பேராற்றல் கதிரவன் ஒளி போல் எல்லாருடைய குடிலுக்குள்ளும் நுழைந்து, அங்குள்ளவர்க்கும் துணை நிற்கும் என்பதை மறந்து விடுகின்றனர். போலிச் சமயத் தலைவர்கள் பல பெருமைசேர் கோயில்களில் நுழையவென்று ஊர் ஊராக வும், நாடு நாடாகவும் அலைகின்றனர். ஆனால் உண்மை மெய்யறிஞனோ தன் இருப்பிடத்திலேயே இருக்கின்றான். மிகத் தேவையாக உள்ள போதுகூட அவன் அடிக்கடி தன் இருப்பிடத்தை விட்டு நீங்குவதில்லை. மூட்டை கட்டிக் கொண்டும், தம் நண்பர்களைப் பார்த்து விடை பெற்றுக் கொண்டும், ஊர் ஊராய்ப் போய்க் கோயில் குளங்களை வழிபடுவது மூடர்கள் விரும்பும் செயல். நம் உள்ளக் கவலைகளை மாற்றப் பெருமையுற்ற அத் திருப்பதிகளில் நம் கால்களை வைக்கும் முன்பே, நம் கவலைகள் அங்குப்போய் எதிர்கொண்டு நமக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் நாம் போய்விட்டோமே என்பதற்காக அங்குள்ள வழிபாட்டிலும், காட்சிகளிலும் நம் உள்ளம் மகிழ்ந்ததாகப் பிறர் நம்புமாறு நாம் நடிக்கின்றோம். எங்குப் போனாலும் நம் நிழல் போலவே நம் சுழல்கின்ற உள்ளமும் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/30&oldid=1162330" இலிருந்து மீள்விக்கப்பட்டது