பக்கம்:தன்னுணர்வு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19

வருகின்றதை நாம் உணரவேண்டும். இத்தகைய செலவுகள்யாவும் மன நோயின் விளைவுகளே

ஒருவரைப் பார்த்து பின்பற்றாதே! உன் தனிம ஆற்றலை வெளிப்படுத்து. ஒவ்வொருவனுக்கும் அவனவன் முற்றும் முழுமையாகச் செய்யும் ஆற்றலை, அவனைத் தோற்றுவித்த பேராற்றலே உண்டாக்கித் தரமுடியும். ஒருவன் ஒன்றில் சிறப்புற்றவன் என்று அவனே தன்னைப்பற்றி உலகுக்கு வெளிப்படுத்துகின்ற வரையில், அவனாற்றலை எவரும் முன் கூட்டியே அறிந்து கொள்ளல் இயலாது. செகப்பிரியர், பிராங்களின், வாசிங்டன், பேகன், நியூட்டன் ஆகிய இவர்கட்கு அறிவூட்டக்கூடிய ஆசிரியன் எங்கு இருக்கின்றான்? ஒவ்வொரு பெருமகனும் தன்னந் தனியனே. செகப்பிரியரைப் பார்த்து வேறொரு செகப்பிரியராகிவிட முடியாது. உனக்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ள கல்வியைப் பயில், நீ அதைத் தெரிந்துகொள்ள விரும்புவாயானால் எல்லா ஆற்றலும் எளிதில் உனக்கு வரும். இந் நொடியில் உன்னுள்ளே ஒரு பெரிய ஆற்றல் உள்ளது. அதன் அடிவழி நீ நடக்கத் தொடங்குவையானால், உன்னைக் கடந்துபோன ஊழிகளை நீ மீண்டும் படைத்துவிடுவாய்

மக்கள் கூட்டம் முன்பிருந்ததைவிட மிகவும் மேம்பாடடைந்துள்ளது என மக்கள் தங்களைத் தாங்களே வியந்து பாராட்டிக் கொள்கின்றனர். ஆனால் அவருள் ஒருவனாவது சிறப்புற்று விளங்குவதாகத் தெரியவில்லை

மக்கள் கூட்டத்தில், வளர்ச்சி என்பதே இல்லை. ஒரு புடை முன்னேறினால், ஒரு புடை பின்னிறங்குகின்றது. என்றும் இடைவிடாத மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நாகரிகமற்ற வாழ்விலிருந்து நாகரிகத்தை அடைவதாகக் கூறப்படுகின்றது. புதிய சமயங்களை உண்டாக்கியிருப்பதாகப் பெருமைப்படுகின்றது. செல்வத்தை பெருக்கியிருப்பதாக ஆரவாரிக்கின்றது.பூதவியல்,வேதியியல் முதலிய அறிவியற் கலைகளில் வளர்ந்துள்ளதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/31&oldid=1162377" இலிருந்து மீள்விக்கப்பட்டது