பக்கம்:தன்னுணர்வு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21

மாற்றிக்கொள்வதும் அவற்றின் வண்ணங்களைப் புதுக்கிக் கொள்வதும்போல் நாகரிகப் பொருள்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றானே யல்லாமல் தன் உடல், உள்ளத் திறமைகளை உயர்த்திக் கொள்ளச் சிறிதும் முயலவில்லை. புதிதாகக் கண்டுபிடிக்கும். ஒரு பொறியினால் நமக்கு ஏற்படுகின்ற நன்மைக்கும் அதனால் நம் ஆண்மைக்கும் அகத்திற்கும் ஏற்படுகின்ற தீமைக்கும் கணக்குச் சரியாகப் போய்விடுகின்றது. சில நூற்றாண்டுகட்கு முன் மிகுந்த ஆர வாரப்படுத்திய பொறிகள், இன்று தூக்கி யெறியப்பட்டு அவ்விடத்தைப் புதுப்பொறிகள் வலிந்து பற்றுவது நமக்கு வேடிக்கையாகவிருக்கின்றது

மாந்தன் உயிராற்றலை மிகுக்கின்ற வினைப்பாடுகளை விட்டு விட்டு, எளிய அவன் உடலாற்றலையாவது பேணாமல், தன் புறவாழ்க்கைப் பருப்பொருள்களையே நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டிருக்கின்றான். செல்வமே அவனுக்குக் குறிக்கோளாகிவிட்டது. அறச்சாலைகளையும், கல்விச்சாலைகளையும், அரசியல் மன்றங்களையும், அச் செல்வத்தின் காப்பாளர்களாகவே பயன்படுத்தத் தொடங்கி விட்டான். எவனாவது இவன்றன் கல்வி இழிவையும் அறக் கொலையையும், அரசியல் கூத்தாட்டங்களையும் கடிந்து கூறுவானானால், மக்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு அவன்மேல் விழுந்து தாக்குகின்றனர்

இக் காலத்தவன் பெருமை அவன் சேர்த்த சொத்துகளிலேயே இருப்பதாக எண்ணுகின்றான். தன் தன்மையைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. ஆனால் அறிவுள்ளவன். தன் சொத்துகளின் பெருக்கத்தைக் கண்டு நானுகின்றான். தன் பண்புபோய்விடுமோ என்று அஞ்சுகின்றான். இன்னும் அவனுக்குள்ள செல்வம்தன் முன்னோர் வழியாவது பிறர் கொடுத்த கொடையிலாவது தவறான வழியிலாது கிடைத் திருப்பின் அதை அருவருத்துத் தொடவும் கூசுகின்றான். அது தன் உடைமையன்று; அதன் வேர் தன்னுள் இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/33&oldid=1162405" இலிருந்து மீள்விக்கப்பட்டது