பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சா.இராகவய்யங்கார் 101. திருமங்கையார் பெரியதிருமட லென்னுந் திவ்யப்ரபந்தத் துப் 'புல்லாணித் தென்னர்தமிழை வடமொழியை' என்று பணித்தருளிய சிறப்பு இந்நாட்டின் கல்விச்சிறப்பப் பற்றிய தென்று நன்குணர்ந்துகொள்

 தெய்வமே தென்மொழி, வடமொழியாக மூர்த்திகரித் தமர்ந்தருளியது இச்சேதுநாட்டுக்கே சிறந்ததென்று துணியப்படும். திருப்புல்லாணியில் பலி யெம்பெரு மானைத் 'தென்னன்தமிழான்' என்று வழங்குவதுங் காண்க.
 இன்னும், அத்தலத்து மூர்த்தியை வேதமுமானா” னென்றும், 'அன்னமாய் நூல்பயந்தா' னென்றும் ஆழ்வார் வழங்கியருளுதலையும் நோக்குக. இப்பெருமை யெல்லாங் கருதியே சேதுபதிகள் இத்திருக் கோயிலிற் பெருந்திருப்பணியெல்லாம் முற்றுவித்தனராவர்.

'எனதன்ம மாயினுந் தான்கற்ப காலமிருக்க வுன்போன் மன தி னினைந்தபடி செய்யயார்க்கும் வராது கண்டாய் கனதன மால்திருப் புல்லாணிக் கோபுரங் கட்டிவைத்த தனதவிஜய ரகுநாத சேது தளசிங்கமே' என மிதிலைப்பட்டி அழகியசிற்றம்பலக்கவிராயர் பாடியதனா னிதனையுணர்க.

  சேது நாட்டுக்கு மூலகாரணனான சீராமமூர்த்தியைக் கல்வியிற் பெரியரான கம்பர், 'தென்சொற்கடந்தான் வட சொற்கடற்கெல்லை தேர்ந்தான்' என்றே பாடினார். சீதாப்பிராட்டியாரைத் தேடவிடும்போது அநுமானை வேறு கொண்டு சீராமமூர்த்தி, 'இராவணன் தேவபாஷை யறிந்தவனாதலான் அதனைச் சீதைமுன் போதாது மாதுவடிபாஷையி லிரகசியங்களெல்லாவற்றையும் ஒதுக"

த.கு.வே-7