பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார் 107 கைக்கிலை பாடியவர் புல்லங்காட ரெனப்படுவர். புல்லங் காடு, புல்லாரணியம்; இது திருப்புல்லானியோர்கும்.

 இத்தகைப் பெருந் தமிழ்ச்சங்கப்புலவரெலலாம் பிறந்துசிறந்த இச்செந்தமிழ்ச் சேதுநாட்டி லிழிகுலச் சிறுவரும் அறிவான்முதிர்ந்தவராவரென்பது பாண்டி யனைக்காண்பான் இச்சேதுநாட்டுநெறியேபுக்க கம்பர், நாட்டரசன்கோட்டைக் காட்டில் எருமைமேய்ப்பார் இளையர் சிலரைக் கண்டு முடிக்கரைக்கு நெறி யாதென்று வினவியபோது அவர் அடிக்கரை பிடித்தேகின் முடிக்கரை யெய்தலாகுமென்று கூறக்கேட்டு அதன் பொருள் தெரியாது திகைத்துப் பின் றெளிந்து,

'கருங்காலிக் கட்டைக்கு நாணாக். கோடாரி' யிருங்கதலித் தண்டுக்கு நாணு-மருங்காகக் காட்டெருமை மேய்க்கின்ற கிாளையர்க்கே யாந் - தோற்றோம் நாட்டரசன் கேர்ட்டை நகர்க்கு' என்று பாடியதனான் அறியலாகும்.

இதனை, முத்துநாயகப்புலவர் தாமியற்றிய 'கண்ணு டையம்மைபள்ளு' என்னும் நூலில்,

'வாசமான தென்பாண்டி நன்னாடு மதுரை நாட்டில் வளரு மிந்நாடு காசினிக் குட் கதிர்க்கின்ற நாடுமுன் கம்பர் வந்து துதிக்கின்ற நாடு பூசுரர்க் கன்னதானஞ் செய்நாடு புலவர்டே லபிமானஞ் செய்நாடு ராஜலக்ஷமி கண்னுடையாளருள் நல்கு நாட்டரசன் கோட்டை நாடே' எனப் பாடியவாற்றா னறிந்து கொள்க.

 இச்சிறப்பெல்லாந் தெரிந்தே இந் நாட்டரசன் கோட்டைக் கண்ணுடையம்மைகோயிற் கொடிக்கம்ப