பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சா. இராகவய்யங்கார்

115。

 டியோர்” என்னும் ஊர் காண்காதைக்கு (சிலப். பக். 336. 1838) அடியார்க்குநல்லார் கூறிய உரையானே அறியலாம். இச்சேதுபதிகட்குத் 'தொண்டியந்துறை காவலோன் என ஒரு பட்டம் பழைய சாசனங்களிலெல்லாம் கானப்படுகின்றது. இத்தொண்டிப்பதி இக்காலத்தும் இச்சேது. நாட்டுச் சிறந்த துறைமுகப்பட்டினமாயுள்ளது.

சோழற்குச் சிறந்த துறைமுகமாயிருந்தது இவர் காப்பிற்பட்ட சிறப்பான், இவர் தொண்டியந்துறை காவலர் எனப்பெயர்பெற்றனராவர். எட்டுத்தொகை நூல்கள் சிலவற்றில் சேரற்குரியதாகக் கூறப்பட்ட குட்டு வன் தொண்டியென்பது குடகடற்கரைக்கண்ணதாகும். அது வேறு, இது வேறென உணர்க. ‘நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரலொன் மருக’ என்னும் புறப்பாட்டாற் சோழர் மரக்கலப்படையையுடைய ராயினாரென்பது நன்கறியப்படும். இம்மறவர் அவர் படைத் தலைவராதல்பற்றி ஆற்றினும் கடலினும் தம் படையைச் செலுத்துவோர் என்னும் கருத்தால, "ஆற்றுப்பாய்ச்சி கடற்பாய்ச்சி' எனப் பட்டம்பெற்றனராவார்.

இவர் இம்மரக்கலப் படைவலியாற் சென்று ஈழமும், யாழ்ப்பாணராயன் பட்டணமும் கஜவேட்டைகொண்டருளினாரென்று விருதாவளியும் பெறுவர். இவரது மரக்கலப்படைப் பயிற்சி, இவர்க்குச் [1]சோழரினின்று எய்தியதாகும். இம்மறவருள் மரக்காயகிளை என்னும் பெயரால் ஓர் கிளை வழங்கப்படுதலும் இக்கருத்தையே வலியுறுத்தும். அது மரக்கலப்படையைக் கொண்டு செலுத்தும் பகுதியினர் எனப்பொருள் தருதலும் கண்டு கொள்க.


  1. மகா - ௱ - ௱ - ஸ்ரீ : வி. கனகசபைப்பிள்ளையவர்களும் தாம் எழுதிய “Tamils Eighteen hundred years ago” என்னும் வித்தியாசத்தில், சோழரையே திரைய ரென்னும் பெயர்க்குரியராகக் கொண்டு, அவரையே கடலிற் சேறலின் வலியுடையராகக் கூறுவது காண்க.