பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ரா. இராகவய்யங்கார்

117

 பரணி யென்னும் நூலானே நன்கறியலாவன. இவற்றாற் சோழர் வழித்தோன்றி நாடாட்சி தனியேயளிக்கப் பெற்றாரும், அச்சோழர்க்குப் படைத்தலைவராய்ச் சிறந்தாரும், தொண்டைமானெனச் சிறப்புப்பெயர் பெறுதலின் இம்மறவரும், சோழர்படைத்தலைவராய்ச் சிறந்த ஒற்றுமையால் தொண்டைமான்களெனச் சிறப்புப்பெயர் எய்தினராவர். இப்பகுதியினரைத் தொண்டைமான் கிளையெனலும் நன்குபொருந்துவதேயாம். இவர்கள் சாசனங்களில் "சுவாமித்துரோகிகள் மிண்ட" னென்றி ருப்பது இவர்கள் படைவீரராய் இருந்தனர் என்பதையே நன்கு புலப்படுத்தும்.

இனி இம்மறவர் தேவரெனச் சிறப்புப்பெயர் புனை தலும் அச்சோழர்பாற் பயின்றமையே குறிக்கின்றது. குலோத்துங்க சோழதேவன், திரிபுவனதேவன், ராஜராஜ சோழதேவன், ராஜேந்திரசோழதேவன் எனச் சோழர்சாசனங்களில் வழங்குவது காண்க. திரிபுவனதேவன் என்பது வெண்பாமாலை உரையினும் கண்டது. தேவருருவாய் நின்று உலகங்காத்தலின் அரசனைத் தேவன் என்பர் என உணர்க. இவையெல்லாம் இம்மறவர்க்கும் சோழர்க்கும் உள்ள பண்டை இயைபினை வலியுறுத்துவனவாம்.

இனி, இம்மறவர் புனைகின்ற முல்லைமாலையுஞ் சோழர்க்குரியதாகும். "மூவர்விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன்" (பாடான் படலம்-34) என ஐயனாரிதனார் கூறியவாற்றானே, சோழர்க்கு முல்லைமாலை யுரியதாதல் கண்டுகொள்க. அரசர்க்குப் போர்ப்பூ எனவும், தார்ப்பூ எனவும் இரண்டுண்டு என்பது "படையுங் கொடியும்" (81) என்னும் மரபியற் சூத்திரவுரையானுணர்க.

போர்ப்பூவாவது போரில் இன்னவேந்தன் வென்றான் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டிச்சூடும்பூ; தார்ப்பூவாவது ஓர் விசேடமாக இடுவது என்ப. சோழற்கு ஆர் என்பது போர்ப்பூவாகவும், முல்லை என்பது தார்ப்பூவாகவுங்த.கு.வே-8