பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

X

மன்னர்கள் அவைப் புலவராக அமைந்தார். சங்ககாலக் குறுநிலமன்னர்களான வேளிர்,கோசர் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இவருடைய சுதந்திரமான தனி வழிப்பாதை காண்பதில் உள்ள ஆர்வதைப் புலப்படுத்தும். தித்தன் வேளிர் குறுநில மன்னன். வஞ்சியருகில் வதிதவன் என்பதைச் சமீபத்தில் கருவூர் அமராவதிப் படுகையில் கிடைத்த தித்தன் பெயர் பொறித்த நாணயம் வலியுறுத்தும். கோசர் வேளிரை அடுத்துத் தமிழ்நாடு வந்தவர்; கோசர் புத்துர், பின்பு கோயம்புத்துர்ர் எனத் திரிந்தது; வேளிர் காஷ்மீர நாட்டிலிருந்து மிகப் பழைமையான காலத்தில் தமிழ்நாடு போந்தவர். பொருநராற்றுப் படைத் தலைவன் கரிகாலன், பட்டினப்பாலைத் தலைவன் திருமாவளவன் என்று இன்னோரன்ன புதிய செய்தி களை வெளியிட்டவர். இவற்றில் சில காலத்தால் வேறுபடலாம்.

தமிழர் இப்படைப்புகளைப் படித்து இன்புறுவதற்காகவே இந்நூல் தொகுதி வெளியிடப்படுகிறது.