பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழகக் குறு நில வேந்தர்

தஞ்சையரசனைப் போர்தொலைத்துச் சிறந்த தளவாய்தாமோதரம் பிள்ளையவர்கள் வேள்விக்கோவை கொண்டனர். இவ்வில்லேருழவர் தொல்குடி சிறக்கவந்த சொல்லேருழவரும், இராச்சியதந்திர மகா நிபுணரென அறிஞர் பலரானும் புகழ்ந்து கொண்டாடப்பட்ட பேரறிவாளரும் ஆகிய ஸ்ரீமாந்-பொன்னுச்சாமித் தேவரவர்களது செந்தமிழ் வண்மை நந்தமிழ்நாடெல்லாம் நன்கறிந்ததே.

இவர்கள் நல்லுதவியால் வெளிவந்த செந்தமிழ் நூல்கள், 'திருச்சிற்றம்பலக்கோவையாருரை, திருவள்ளுவருரை, நன்னூல்விருத்தியுரை இலக்கணக்கொத்துரை, தொல்காப்பியப் பாயிரவிருத்தி: முதற்சூத்திர விருத்தி, தமிழ்ப்பிரயோகவிவேகவுரை, தருக்கசங்கிரகவுரை, தனிப்பாடற்றிரட்டு, மருத்து நூல் எனப்பலவாம். இப்பிரபு சிகாமணிகளது அருமைச்சோதரராகிய ஸ்ரீமாந்-முத்து ராமலிங்கசேதுபதி யவர்களது ஸங்கீதஸாகித்தியவன்மை இந்நாடெல்லாம் நன்று தெரிந்ததேயாம். அவர்களியற்றிய நூல்கள் வள்ளிமணமாலை, முருகரநுபூதி, மும்மொழிமாலை, பிரும்மகைவல்யம், பாலபோதம், பிரபாகரமாலை, காபகப்பிரியா, ரஸிகரஞ்சனம் எனப் பலவாம்.

இத்தகைச் சேதுபதிகள் மரபிற்கோர் திலகம்போல் விளங்கிப் பலகலையறிவானும் பிரசங்கவலியானும் பெருங்கொடையானும் நிலவுபுகழ்பரப்பி, நந்தமிழ் நாடு புலம்பச் சமீபகாலத்துத் தேகவியோகமடைந்த ஸ்ரீமான்பாஸ்கரசேதுபதி மன்னரது செந்தமிழறிவும் செந்தமிழபிமானமும் யாமெல்லாம் கண்கூடாகக்கண்டனவே. அமிழ் தினுமினிய தமிழ்முழுதோர்ந்து இமிழ்கடல் வரைப்பெலாம் அத்தமிழ்ச்சுவைதெருட்டவிழைந்து செந்தமிழ்ச்சங்க மொன்று சீர்பெற நிறுவி அதன்வளர்ச்சிக்கண்ணே தண்ணுங்கருத்தும் உடையராய்ச் சிறந்தநஞ்செந்தமிழ் வள்ளலாகிய பாலவனத்தம் ஜமீந்தார் ஸ்ரீமான்-பாண்டித்துரைத் தேவரவர்களும் இத்தொல்குடிப்பிறப்பினராவர்.

இவையெலாம் இச்சேதுபதிகட்கும் தமிழிற்குமுள்ள பொருத்தம் விளக்குவனவாம். இத்துணையுங் கூறிய வாற்றான் இச்சேதுபதிகளது தொன்மையியல்பும், செந்தமிழ்வண்மையும் ஒருவாற்றியத்தக்கன.

முற்றும்.