பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 தமிழகக் குறுநில வேந்தர் குடியினரும் தென்னாடு வந்து மூவேந்தர்க்கும் உறுதுணையாய் இருந்தனர். இதனைப் பிறிதொரு கட்டுரையில் காண்போம்.

   "தடவினுட்டோன்றி" என்பது தடவு ஓமகுண்டம் என்றார் புறப்பாட்டுரைகாரர். துவரையாண்டு தெற்கண் வந்தது பல்வகை வேளிர்க்கும் ஒக்குமெனவும் இப்பாடல் பெற்ற வேள் அவருள் இருங்கோ. ஆதலால் வேளிருள் வேள் எனப்பட்டாரெனவும் கொள்க. உரைகாரரும் நூலாசிரியரும் "ஐம்பெருவேளிர்" (புறம், 23 உரை) "ஈரெழு வேளிர்” (அகம், 135) "பதினொரு வேளிர்" (அகம் 24) என வழங்கலான் இவர் பல்வகைக் குடி யினர் என்பது துணியலாம். ஈண்டுக் காட்டிய கபிலர் கூற்றில் "ஆண்டு வந்த வேளிர்" எனவும், அகப்பாட்டில் "அடு போர் வீயா விழுப்புகழ் விண்டோய் வியன்குடை ஈரெழு வேளிர்" (135) எனவும் காண்டலான் இவர் அரச வழியினராதல் புலனாகும். "வேளிரும் புரோகரும் குறுநில வேந்தர்” எனத் திவாகர நூலார் பாடுதலும் நச்சினார்க் கினியர் "பல்லொளியர்" என்னும் பட்டினப் பாலையுரையுள் "ஒளியராவார் பிறமண்டலங்கட்குள் அரசாவதற்குரிய வேளாளர் ஆவார்" எனக் கூறுதலும், அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரையில் "வேளாண் காமந்தர்"

(இந்திர விழா 14) என வரைதலும் நோக்கி இவ்வுண்மை உணர்க. கபிலர் வேள் பாரியைச் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் பெருமுடியரசன் முன்னின்று "எங்கோ" (பதிற், 7.1) எனப்பாடுதலும் நத்தத்தனார் சிறுபாணாற்றிற் "பறம்பிற் கோமான் பாரி” எனச் சிறப்பித்தலும் காண்க. இனிக் கபிலர் இவ்வேளிர் ஆண்டதாகக் கூறிய துவரை இஃதெனத் துணிதற் கண்ணேதான் இவருண்மை வரலாறினிது தெளியப்படுவதாகும். துவரை எனத் தெரிதற்குரிய பெயருடைய ஊர்கள், கண்ணபிரான் ஆண்ட குசஸ்தலி துவாரகையும், ஒய்சளர் வாழ்ந்த துவாஏஸமுத்ரமும் (மைசூரைச் சார்ந்தது.) இந்தியாவைக்