பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.ராகவய்யங்கார்

15


ஆட்சியுட்பட்டதேயாயினும் இதனையே அவ்வேள்புல வேந்தர் 49 தலைமுறை தலைநகராக அமைத்து ஆண்டனரென்றற்கு நூலும் சாசனமும் இல்லாமை நினையலாம். தெக்ஷினை பதத்து மேற்பக்கத்துப் பலபத்ரபுரத்தையும் (பாலமி, வாதாபி) கீழ்பால் வெங்கியையும் தலைநகர்களாகக் கொண்டு வேள்புலச் சாளுக்கியர் வாழ்ந்தது சாசனங்களால் அறியலாம். அன்றியும் சாளுக்கியர் தெக்ஷிணைபதத்து வருவதற்கு முன்னே 59 தலைமுறை வடநாட்டில் வாழ்ந்ததாக, அவர் சாசனங்கள் ஒருபடியாகக் கூறுதல் காண்டலான். அவ்வேள் புலவரசர் விந்திய மலைக்குத் தெற்கட்டோன்றியவராகாமை தெளியலாம். கேள் புகச் சாளுக்கியர் சாசனங்களும், அவ்வேள்புலச் சாளுக்கியரிற் சிறந்த விக்கிரமாதித்தனைக் காச்மீரப் புலவர் பில்ஹனர் பாடிய சரிதமும், கபிலர் பாடிய வேளிர் வரலாறும் இவர் தோற்றம் வடபாலுணடாய தென்று ஒரு படியாகக் கூறுதலுண்மை நன்கறியலாம். சாசனங்களும், விக்கிரமாதித்த சரிதமும் சாளுக்கிய வேந்தர் வடநாட்ட யோத்தியிலாண்டனரென்று கூறும்.

அயோத்தி நாட்டும் துவாரகா (sultanpur) என்னும் ஒருருண்டு. அஃதுள்ள நாடு வேள்புலம் என்றற்கு ஆதாரமின்மையாலும், அயோத்தி நாடு சூரிய குலத்தவர் ஆட்சியாதலானும், சந்திரகுலத்தவராகிய சாளுக்கியிருக்குரிய தாகாமையாலும் துணிதற்கில்லையென்க. மற்றச் சாசனம் சிலவும், பில்ஹணரும், சாளுக்கியர் முதலில் அயோத்தியில் வாழ்ந்தவர் என்று கூறுதல், துவரை நாடாகிய வேள் புலத்தை ஆண்ட அரசர் தந்நாடு விட்டுச் சிலகாலம் அயோத்தியிலும் இருந்து வாழ்ந்தது பற்றியென்று நினையலாம். இவர் அயோத்தி நாட்டிலே தோன்றியவரல்லரென்பது பில்ஹணர்க்கும் உடன்பாடாதல், இச்சாளுக்கியர் உற்பத்தியை "ஸிந்து தீரத்தில்" (த்ரைலோக்ய பந்தோஸ் ஸீர ஸிந்து தீரே ப்ரத்யூஷ சந்தியாஸம யோப பூவ) வைத்துக் கூறுதலான் உணரலாம். இவர் புலஸ்