பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

31

சரித்திரகாரர் கூறுவர் (Tarangini,II 122.) இதற்கேற்பவே வேள் புலச் சளுக்கர்தாம் கிருத்திகை முதல் எழுவர் பாலுண்டு வளர்ந்தவரென்றும் கார்த்திகேயர் என்றும் கூறிக்கொள்வர். (Bombay Gazetter, vol I, Part il, Page 337) அவ்வழி பாட்டுக்குரிய தெய்வங்களைத் தான் தொன்முதிர் வேளிர், தாம் தங்கிய மலையிலும் நிறுவி அதற்கு ஏழில் என்று பெயரிட்டிருந்தனரோ என்று நினைத்தலும் தகும்.

“இருள் தீர் மணி விளக்கத் தேழில்” என்பதும் ப்ரதர பாதித்தன் அரண்மனையில் “அவன் (வணிகன்) இரவில் மணியாலாகிய விளக்குகளைக் கண்டான்” (தரங், 4-15) என்பதும் ஒத்திருத்தல் காண்க. ஏழில்–ஏழு கோயில் ஏழின் மலையினொரு பகுதியாகிய பாழி என்னும் படை வீட்டை அணங்குடையதாகவே அகநானூறு - “அணங் குடை வரைப்பிற்பாழி” (அகம் 372) எனக் கூறுதற்கும் இதுவே காரணமாகும். இம்மலையிற் சங்கப் புலவர் பாடிய குருட்டு வேளும் காச்மீரத்தினின்று வெளியேறிய அந்தராஜனும் ஒருவனென்று துணியின் அஃது இழுக்காகாது. ஸதிஸ்ரஸ் பார்வதி ஸரஸேயாம் என்பது சிவபிரான் திரிசூலத்தைக் கொண்டு குத்திய வளவிற்றரையினின்று பார்வதி விதஸ்தா நதியாகப் புறப்பட்டாள் எனத் தரங்கினி (iv. 30) கூறலான் அறியலாம். விதஸ்தா என்பது ஸதீஸரஸினின்றுண்டாகி வரும் நதி என்றும் இது பார்வதியே தன்னை உருமாற்றிக் கொண்டு வருவதாகக் கருதப்படும் என்றும் தரங்கினி (1-29) கூறும்.

இந்த நல்ல நீரால் வளம்படுதல் நோக்கி இந்நாட்டைப் பார்வதி யென்றே வழங்குவர் என்பது ராஜதரங்கினி “கச்மீர தேசமே பார்வதியாகும்” (1-72) எனக் கூறுதலான் அறியப்படுவது. இதனால் இந்நாட்டினின்று தென்பதத்துக் குடியேறியவன், தன் தாய் நாட்டை மறவாது தன்னைப் பார்வதி புத்ரன், ஸதீபுத்ரன் என்று கூறிக்-