பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழகக் குறுநில வேந்தர்

வேந்தர் கொண்டான் என்றும், அப்படிக் கூறியவனை வேள் எனவும் ஸதீபுத்ரன் எனவும் தென்னாட்டார் வழங்கினரென்றுந் தெளியலாம். தமிழில் வேள் என்பது பார்வதி மகனாராகிய குமரக்கடவுட்குப் பெயரென்பது நன்கறிந்ததாம். அசோகச் சக்ரவர்த்தி - தென்னாட்டுவதிபவராகச் சோழ பாண்டிய கேரள புத்ரருடன் ஸதீயபுத்ரரையுந் தன் சாசனத்துள் எடுத்துக் காட்டலால் ஸதீயபுத்ரர் என்ற ஒரு வகை அரசர் வழியினர், தமிழ் நாட்டில் கி.மு. 227க்கு முன்னே வதிதல் தெரியலாம். இவர் ஸதீஸரஸில் உண்டான நிலத்தவராதலால் தம்மை ஸதீயபுத்ரர் என்று வழங்கினாரெனக் கொள்ளத் தடையின்மை காண்க.

சதீயபுத்ரர்

இவ்வேளிர் முன்னே அகத்தியனாருடன் தென்னாட்டுட்புக்குவதித வேள் வேந்தர் வழியினராவர். தன் இனத்தவர் வதிதல் பற்றி அந்நாட்டுப் போந்து யுதிஷ்டிரனாகிய குருட்டு வேந்தனும் அவருடன் வதிதான் என்று நினையலாம். வேளிர் தமிழில் தம்மைக் குமரக் கடவுள் பெயரால் வேள் என்பது போலவே வேள்புலச் சளுக்கர் தம்மைச் சாசனங்களில் (Epi. Ind, vol., 19-8) க்ருத்திகை முதலாய தாயர் பாலுண்டவராகக் கூறுதல் காணலாம். இக்கருத்திற்கியைய முதற்றரங்கம் 29ஆவது சுலோகத்தில் “குகோந்முகியினின்று பெருகும் விதஸ்தா ததியாகிய பால் நாகமுகத்தாலுண்ணப்பட்டும் சுவை குன்றாது ஒழுகும்” எனக் கஷ்மீர நாட்டு விதஸ்தா நதிப் புனலை உண்பவராகிய நாக குலத்தவரைப் பார்வதிபாலுண்பவராக வருணித்தல் காணலாம். இதன் கண் குகோந்முகி என்பது குகனிடத்து அன்புடைய பார்வதி எனவும், குகைகளினின்று புறப்படுகின்ற நதி எனவும் பொருள் கொள்ள வைத்த சிலேடையாம். நாகமுகம் என்பது இந்நாட்டிலுள்ள நாக குலத்தவர் வாய் என்றும், விநாயகக் கடவுள் உடைய யானை வாயென்றும் பொருள் கொள்ள வைத்த சிலேடை-